பதிவு செய்த நாள்
10 செப்2018
01:02
மதிப்புசார் முதலீடு, வளர்ச்சி சார்ந்த முதலீடாக உருமாறிய காலக்கட்டம், வரலாற்று முக்கியத்துவம் கொண்டது.
ஒரு
காலகட்டத்தில், சொத்துகளின் மதிப்பீடுகள், பங்குச் சந்தையில்
மிகவும் உயர்ந்து விட்ட நிலையில், மதிப்புசார் முதலீட்டின்
அளவீடுகளும், வழிமுறைகளும் செயலிழக்க துவங்கின. அவற்றை
பயன்படுத்தி முதலீட்டு தேர்வுகளை செய்ய முடியாத நிலைக்கு,
வல்லுனர்களே தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், புதிய சிந்தனைகள்
தேவைப்பட்டன. அவை மதிப்புசார் முதலீட்டு சித்தாந்தத்தை, அடுத்த
கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் இருக்க வேண்டிய
அவசியத்தை, துறைசார் வல்லுனர்கள் உணர்ந்தனர்.ஆனால், இதற்கான
தீர்வை பிரபலப்படுத்தியது, முதலீட்டு துறையில் வெற்றி கண்ட,
பபட்டும், சார்லி முங்கரும் தான். உள்ளடக்க மதிப்பு –
‘இன்ட்ரின்சிக் வேல்யூ’ என்ற புதிய குறியீட்டை, இவர்கள் இருவரும்,
மதிப்புசார் முதலீட்டு சிந்தனைக்குள் நுழைத்தனர்.
காலப்போக்கில், ஒரு நிறுவனத்தின் உள்ளடக்க மதிப்பு, அனைத்து முதலீட்டாளர்களின் கணக்கீடுகளிலும் முக்கிய அங்கமானது.
உள்ளடக்க மதிப்பீடு என்றால் என்ன?
ஒரு
நிறுவனம் பெற்றிருக்கும் நன்மதிப்பு, எதிர்காலத்திலும் அதற்கு
லாப பெருக்கம் தரும் என்பதே இதன் அடிப்படை. அந்த நன்மதிப்பு,
தொடர்ந்து நிறுவன வருவாய் வளர்ச்சிக்கும், லாப பெருக்கத்திற்கும்
வழி செய்யும் தன்மை உடையது.இந்த வளர்ச்சி எந்த அளவு
இருக்குமென்பது, பல தொழில்களில் எளிதில் யூகிக்கக்கூடியது.
அப்படி யூகிக்க உகந்த தொழில்கள், நுகர்பொருட்கள் விற்பனையில்
அதிகம் காணப்படக் கூடும்.
இந்த நிறுவனங்களின்வருவாய் மற்றும் லாப வளர்ச்சியை நம்மால் யூகித்து, எதிர்கால
லாபத்தின் இன்றைய மதிப்பை, எளிதில் அளவிட முடியும்.வரும்
ஆண்டுகளின் லாப கணக்கை போட்டு, அதன் ஒட்டுமொத்த மதிப்பை
கண்டெடுத்து, அந்த தொகையின் இன்றைய மதிப்பை, அளவிடுவதே இந்த
வழிமுறை.அப்படி கண்டெடுக்கும் மதிப்பை, ‘உள்ளடக்க மதிப்பு’ என, பபட், -முங்கர்பெயரிட்டனர். இந்த மதிப்பு, நிறுவனத்தின் எதிர்காலத்தை நன்றாக பிரதிபலிக்கும் என்பதே, அவர்களின் வாதம்.
சொத்து மதிப்பு சார்ந்த, மதிப்பு சார் முதலீட்டு சிந்தனை, லாப வளர்ச்சி சார்ந்து மாற்றம் கண்ட தருணம் மிக முக்கியமானது.மாறும்
சூழலுக்கு ஏற்ப, சித்தாந்தங்கள் தம்மை மாற்றிக் கொள்வதே, அவற்றின்
வாழ்நாளை கூட்டும். அந்த வகையில், இந்த மாற்றம் மிக முக்கியமானது.
இதன் தாக்கம் காலப் போக்கில் வலுவடைந்து, இந்த துறையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
ஒரு
நிறுவனத்தின் மதிப்பு, எப்போதெல்லாம் உள்ளடக்க மதிப்பை விட மிகக்
குறைவாக உள்ளதோ, அப்போதெல்லாம், அதன் பங்குகளை வாங்க வேண்டிய அவசியத்தை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
ஆகவே,
மதிப்பை தெளிவாக கணக்கிட்டு, அந்த கணக்கிற்குள் வரக்கூடிய
தவறுகளையும் சேர்த்து அளவிட்டு, அதன்பின் வரும் மதிப்பீட்டை,
நிறுவனத்தின் உள்ளடக்க மதிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒரு
நிறுவனத்தின் மதிப்பு, முதலீட்டிற்கு சாதகமாக வரும் வரை
காத்திருப்பது அவசியம். தொடர்ந்து அதை கவனித்து, தக்க
மதிப்பீட்டில் முதலீடு செய்வதே, நம் முதலீடுகளின் வெற்றிக்கு
வழிவகுக்கும்.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|