பதிவு செய்த நாள்
28 செப்2018
23:54

புதுடில்லி: உடல் பரிசோதனை நிலையங்களை நடத்தி வரும் நிறுவனமான, ‘மெட்ரோபாலிஸ் ஹெல்த்கேர்’ பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் விண்ணப்பித்துள்ளது. மெட்ரோபாலிஸ் நிறுவனம், நிதி திரட்டும் நோக்கில், 1,52,69,684 பங்குகளை விற்பனைக்கு விடுக்க இருக்கிறது. இந்த விற்பனையில், ‘சி.ஏ.லோட்டஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ்’ நிறுவனத்தின் வசமுள்ள, 1,02,51,816 பங்குகளும், சுஷில் கனுபாய் ஷா வசமுள்ள, 50,17,868 பங்குகளும் அடக்கம். இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ‘ஜே.எம்., பைனான்ஷியல், கிரெடிட் சூசி செக்யூரிட்டீஸ், கோல்டுமேன் சாக்ஸ் இந்தியா, எச்.டி.எப்.சி., பேங்க், கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல்’ஆகியவை மேற்கொள்ள இருக்கின்றன.இந்நிறுவனத்தின் பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.நிறுவனத்தின் பெயரை பிரபலப்படுத்தவும், கைவசமுள்ள பங்குகளை விற்பனை செய்யவும், பங்கு வெளியீட்டை பயன்படுத்திக் கொள்ள இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|