28 வகையான பால் பொருட்களுக்கு மத்திய அரசின் ஏற்றுமதி சலுகை அதிகரிப்பு28 வகையான பால் பொருட்களுக்கு மத்திய அரசின் ஏற்றுமதி சலுகை அதிகரிப்பு ... வளர்ச்சி பாதையில் மியூச்சுவல் பண்ட் துறை வளர்ச்சி பாதையில் மியூச்சுவல் பண்ட் துறை ...
ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிதி நெருக்கடி தீருமா? : தெளிவான திட்டமின்றி முடிந்த பொதுக்குழு கூட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2018
00:58

புதுடில்லி: மும்­பை­யில் நடை­பெற்ற, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழு­மத்­தின் பொதுக் குழு கூட்­டம், நிதி நெருக்­க­டிக்கு தீர்வு காண உறு­தி­யான திட்டத்தை முன்­வைக்­கா­மல் முடிவடைந்தது.அடிப்­படை கட்­ட­மைப்பு, நிதிச் சேவை­கள் உட்­பட பல்­வேறு துறை­களில் ஈடு­பட்டு வரும், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழு­மம், 91 ஆயி­ரம் கோடி ரூபாய் கடன் நெருக்­க­டி­யில் சிக்­கி­யுள்­ளது. கடந்த, ஆக., 27 முதல், இக்­கு­ழும நிறு­வ­னங்­கள், ஒன்­பது முறை, 2,000 கோடி ரூபாய்க்­கும் அதிகமான கடன்­க­ளுக்கு, குறித்த நாளில் வட்டி செலுத்த தவ­றி­விட்­டன.
உரிமை பங்கு : இத­னி­டையே, இக்­குழுமம் நிதி நெருக்கடியைசமா­ளிக்க, 4,500 ரூபாய்க்கு உரி­மைப் பங்­கு­களை வெளி­யிட்­டுள்­ளது. ஆனால், இக்­கு­ழு­மத்­தில், 21 சத­வீத பங்கு மூல­த­னத்தை வைத்­துள்ள, எச்.டி.எப்.சி., மற்­றும் அபு­தாபி முத­லீட்டு ஆணை­யம், அதில் பங்­கேற்­கா­மல் பின்­வாங்கி விட்­டன. எனி­னும், 25.34 சத­வீத பங்கு மூல­த­னத்­து­டன், தனிப் பெரும் முத­லீட்­டா­ள­ராக விளங்­கும், எல்.ஐ.சி., மற்­றும் 23.54 சத­வீத பங்கை வைத்­துள்ள, ஜப்­பா­னின், ஓரிக்ஸ் கார்ப்­ப­ரே­ஷன், உரி­மைப் பங்­கு­களை வாங்க திட்­ட­மிட்­டு உள்­ளன. இத­னி­டையே, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமம், அதன் சொத்­து­களை விற்­பனை செய்து, 30 ஆயி­ரம் கோடி ரூபாய் திரட்­டும் நட­வ­டிக்­கை­யி­லும் இறங்­கி­யுள்­ள­தாக கூறப்­படு­கிறது. இந்­நி­லை­யில், மும்­பை­ யில், இக்­கு­ழு­மத்­தின் ஆண்டு பொதுக் குழு கூட்டம் நடை­பெற்றது. இதில், ஏரா­ள­மான பங்கு முத­லீட்­டா­ளர்­கள் பங்கேற்ற­னர்.
மூன்று அம்ச திட்டம் : இக்­கூட்­டத்­தில், குழு­மத்­தின் துணைத் தலை­வ­ரும், நிர்­வாக இயக்­கு­ன­ரு­மான, ஹரி சங்­க­ரன் பேசி­ய­தா­வது: குழும பிரச்­னைகள் குறித்த பங்கு முதலீட்டாளர்க­ளின் கவலையை போக்கி, நிறுவன செயல்­பா­டு­களில் இயல்­பான சூழலை உரு­வாக்க, மூன்று அம்ச திட்­டம் குறித்துபரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­கிறது.முத­லா­வ­தாக, தற்­போ­தைய உரி­மைப் பங்கு வெளி­யீட்டை வெற்றி பெறச் செய்து, நிதி திரட்டிக் கொள்­வது. அடுத்து ஒரு சில சொத்­து­ களை விற்­பனை செய்து, கடன்­களை திரும்­பத் தரு­வது; சொத்து விற்­பனை திட்­டத்தை துவக்­கும் வரை, கடன்­தா­ரர்­க­ளுக்கு தர வேண்­டிய தொகைக்­காக, பிற வழி­களில் நிதி திரட்­டு­வது ஆகி­யவை குறித்து ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­கிறது. மேலும், பணி­யா­ளர் எண்­ணிக்கை, ஊதி­யம், ஊக்­கத் தொகை குறைப்பு உள்­ளிட்ட, சிக்­கன நட­வ­டிக்­கை­களும் பரி­சீ­ல­னை­யில் உள்­ளன. குழு­மம், விரை­வில் நிதி நெருக்­க­டி­யில் இருந்து மீளும்.இவ்­வாறு அவர் கூறினார்.
எதிர்ப்பு : இக்­கூட்­டத்­தில், நிதி நெருக்­க­டிக்கு தீர்வு காணும் வகை­யில் உறு­தி­யான முடிவு அறி­விக்­கப்­படா­தது, பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளி­டம் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.பெரும்­பா­லான முத­லீட்­டா­ளர்­கள், சொத்து விற்­பனைக்கு எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர்.அதற்கு பதி­லாக, தேசிய நெடுஞ்­சாலை திட்டங்­களை மேற்­கொண்ட வகை­யில், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழு­மத்­திற்கு அளிக்க வேண்­டிய, 16 ஆயி­ரம் கோடி ரூபாயை, மத்­திய அரசு உடனே வழங்க வேண்­டும் என, அவர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.
காலி­யா­கும் கூடா­ரம் : ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழு­மத்­தின் ஓர் அங்­க­மாக, வங்கி சாரா நிதி நிறு­வ­ன­மான, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., பைனான்­சி­யல் சர்­வீ­சஸ் உள்ளது.இந்­நி­று­வ­னம்,17 ஆயி­ரம் கோடி ரூபாய் கட­னில் சிக்­கி­யுள்­ளது. இந்­நி­று­வ­னத்­தில் இருந்து, ஐந்து இயக்­கு­னர்­கள் வெளி­யே­றி­யதை அடுத்து, நிர்­வாக இயக்­கு­ன­ரும், தலைமை செயல்அதி­கா­ரி­யு­மான, ரமேஷ் சி பாவா­வும், சமீ­பத்­தில் பதவி வில­கி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)