மெய்நிகர் கரன்சி ஏ.டி.எம்., துணை நிறுவனர் கைதுமெய்நிகர் கரன்சி ஏ.டி.எம்., துணை நிறுவனர் கைது ...  தங்கம் விலை ஓராண்டு காணாத உயர்வு; பண்டிகை கால விற்பனை விறுவிறுப்பு தங்கம் விலை ஓராண்டு காணாத உயர்வு; பண்டிகை கால விற்பனை விறுவிறுப்பு ...
டி.வி.எஸ்., நிறுவன இயக்குனராக கே.என். ராதாகிருஷ்ணன் நியமனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2018
23:12

சென்னை : டி.வி.எஸ்., மோட்டார் நிறுவன இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக, கே.என்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் துறையில் முன்னணி உற்பத்தியாளராக, டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம் திகழ்கிறது.இதன் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக, கே.என்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, இப்பதவியை அவர் வகிப்பார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.வி.எஸ்., நிறுவனத் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் கூறியதாவது: பல ஆண்டுகளாக, உலகளாவிய உற்பத்தியாளர் வெற்றிப் பயணத்தில் ராதாகிருஷ்ணன் முக்கிய பங்கு வகித்துள்ளார். மிகச் சிறப்பான உயர்தர தயாரிப்புகளை வழங்க வேண்டும் என்பதில், அதிக அக்கறை கொள்பவர். எதிர்காலத்தில் நிறுவனம் பல உயரங்களைத் தொட, இவரது பங்களிப்பு உறுதுணையாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)