பதிவு செய்த நாள்
28 அக்2018
01:06
சென்னை: பூர்விகா மொபைல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள, 5 கோடி ரூபாய் மதிப்பிலான, ‘தீபாவளி பரிசு மழை’ திட்டத்திற்கு, வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து உள்ளது.பூர்விகா மொபைல்ஸ், கடந்த, 18ம் தேதி இத்திட்டத்தை துவக்கியது. நவ., 7 வரை அமலில் உள்ள இத்திட்டத்தின் கீழ், மொபைல் போன் வாங்குவோருக்கு, ‘கார், புல்லட், ஸ்கூட்டி, டிவி, ரெப்ரிஜரேட்டர், வாஷிங் மிஷின்’ உட்பட, 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பரிசாக வழங்கப்படுகிறது.பூர்விகா ஷோரூமில் மொபைல் போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும், குக்கர், மிக்சர் கிரைண்டர், மின்விசிறி, இன்டக் ஷன் ஸ்டவ், புளுடூத், லஞ்ச் பாக்ஸ், வெள்ளி நாணயம், சிம்கார்டுகள் போன்ற ஏதாவது ஒரு பரிசு அளிக்கப்படுகின்றன.இத்துடன், 20 சதவீதம் வரை, கேஷ் பேக் ஆபர்; ஒரு மொபைல்போன் வாங்கினால், ஒன்று இலவசம்; மொபைல் போன் விலையில், 60 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளும், வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.மேலும், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட விலையுள்ள ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு, ‘வாசக போட்டி’ அறிவிக்கப்பட்டுள்ளது.இதில், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட, தனித்துவமிக்க வாசகம் எழுதியோருக்கு, பரிசு அளிக்கப்படுகிறது.இது குறித்து, பூர்விகா மொபைல்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, என்.யுவராஜ் கூறியதாவது:பூர்விகா மொபைல்ஸ் துவங்கியதில் இருந்து, வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஏதாவது பரிசு வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த பிரமாண்டமான தீபாவளி பரிசு மழை திட்டம் மூலம், வாடிக்கையாளர்களின் பண்டிகை கால மகிழ்ச்சியில் நாங்களும் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்திட்டத்திற்கு, வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வாடிக்கையாளர்கள், எச்.டி.பி., – எச்.டி.எப்.சி., ஹோம் கிரெடிட், ஐ.சி.ஐ.சி.ஐ., கார்டுகள் மூலம், பூஜ்ய முன் பண சிறப்பு திட்டம் மற்றும் குறைந்த மாத தவணை திட்டங்கள் மூலம் மொபைல் போன்களை வாங்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|