பதிவு செய்த நாள்
30 அக்2018
23:31

புதுடில்லி : பணப் பரிவர்த்தனைகளுக்கான தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் நிறுவனமான, ஏ.ஜி.எஸ்., டிரான்ஸாக்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, ‘செபி’யிடமிருந்து பெற்று உள்ளது.
இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 1,000 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளது. இதற்காக கடந்த ஆகஸ்ட் மாதத்தில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபியிடம் விண்ணப்பித்திருந்தது. பரிசீலனைக்குப் பின், செபி தற்போது, பங்கு வெளியீட்டுக்கு வர அனுமதி வழங்கி உள்ளது. 400 கோடி ரூபாய் அளவுக்கு புதிய பங்குகளையும், 600 கோடி ரூபாய்க்கு தற்போது உள்ள பங்குதாரர்களின் பங்குகளையும் விற்பனைக்கு விடுக்க உள்ளது இந்நிறுவனம்.
பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும், 1,000 கோடி ரூபாய் நிதியை கொண்டு, குறிப்பிட்ட சில கடன்களை அடைக்கவும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கு பயன்படுத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இந்நிறுவனம், இதற்கு முன், இரு முறை பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டது. தற்போது, மூன்றாவது முறையாக முயற்சியில் இறங்கி உள்ளது.கடந்த, 2015ம் ஆண்டில், 1,350 கோடி ரூபாய் திரட்டும் வகையில், பங்கு வெளியீட்டுக்கு முயற்சி எடுத்து, செபியின் அனுமதியையும் பெற்றது. ஆனால், பங்கு வெளியீட்டில் இறங்காமல் தவிர்த்து விட்டது.
இதே போல், 2010ம் ஆண்டில் ஒரு முறையும், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக விண்ணப்பித்து, பிறகு பின்வாங்கி விட்டது. தற்போது, மூன்றாவது முறையாக முயற்சிக்கிறது.இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், ஆக்சிஸ் கேப்பிட்டல், எச்.டி.எப்.சி., பேங்க், ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ் இண்டஸ்இண்ட் பேங்க் மற்றும் நோமுரா பைனான்ஷியல் அட்வைஸரி அண்டு செக்யூரிட்டீஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|