பதிவு செய்த நாள்
16 நவ2018
23:13

புதுடில்லி : ரிசர்வ் வங்கி, உபரி நிதியில் குறிப்பிடத்தக்க அளவிற்கு, நிதிச் சந்தையில் புழக்கத்தில் விட்டு, மத்திய அரசுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிசர்வ் வங்கியிடம், 9.59 லட்சம் கோடி ரூபாய் உபரி நிதி உள்ளது. அதில், வங்கிகளின் சீர்திருத்த திட்டங்களுக்கும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தாராளமாக கடன் வழங்கவும், 3.60 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்க, மத்திய அரசு கோரியதாக தகவல் வெளியானது. இக்கோரிக்கையை நிராகரித்ததால், ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் மோதல் ஏற்பட்டு, ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல், விரைவில் பதவி விலக உள்ளதாக, பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால், ‘ரிசர்வ் வங்கியிடம் எந்த நிதியும் கேட்கவில்லை’ என, சில தினங்களுக்கு முன், மத்திய அரசு கூறி, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.கடன் பத்திரங்கள்இந்நிலையில், உபரி நிதியில் ஒரு பகுதியை, நிதிச் சந்தையில் புழக்கத்தில் விட, ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:வரும், 19ல், உர்ஜித் படேல் தலைமையில், ரிசர்வ் வங்கி இயக்குனர் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில், உபரி நிதியில், கடன் பத்திரங்களை வாங்கி, நிதிச் சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பது குறித்து, முக்கிய முடிவெடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின், 25 கோடி ரூபாய் கடனை, மறுசீரமைப்பு செய்வது குறித்தும் பரிசீலிக்கப்படும் என, தெரிகிறது.
வாராக் கடன் பிரச்னையால், ஆந்திரா வங்கி, அலகாபாத் வங்கி உள்ளிட்ட, 11 வங்கிகள், ரிசர்வ் வங்கியின் தீவிர கண்காணிப்பு பட்டியலில் உள்ளன. இதனால், இவ்வங்கிகள் கடன் தரவோ, விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ, டிவிடெண்டு வழங்கவோ முடியாத நிலை உள்ளது.விதிமுறைரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு நிர்ணயித்துள்ள, 9 சதவீத மூலதன ஆதாய விகிதம், சர்வதேச வங்கிகள் கடைபிடிக்கும், 8 சதவீதத்தை விட, அதிகமாக உள்ளது என, மத்திய அரசு கருதுகிறது.
அதனால், ரிசர்வ் வங்கி, மூலதன ஆதாய விகிதம் தொடர்பான விதிகளை தளர்த்தினால், தீவிர கண்காணிப்பு பட்டியலில் இருந்து, வங்கிகள் வெளியேறி, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க முடியும் என்பது, மத்திய அரசின் வாதமாக உள்ளது.இந்த விதிமுறையை தளர்த்துவது குறித்தும், ரிசர்வ் வங்கியின் இயக்குனர் குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என, தெரிகிறது.
ரிசர்வ் வங்கி, இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால், மத்திய அரசுடனான பிணக்கு நீங்கி, இணக்கம் உண்டாகும்இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.முக்கிய முடிவுமத்திய அரசு சார்பில், ரிசர்வ் வங்கியின் பகுதி நேர இயக்குனர்களாக, எஸ்.குருமூர்த்தி, சதிஷ் மராதே ஆகியோர், ஆகஸ்டில் நியமிக்கப்பட்டனர். நாளை மறுநாள் நடைபெற உள்ள, ரிசர்வ் வங்கி இயக்குனர் குழு கூட்டத்தில், இவர்கள், மத்திய அரசின் வாதத்திற்கு வலு சேர்த்து, முக்கிய முடிவுகளை எடுக்க துணைபுரிவர் என, கருதப்படுகிறது. மேலும் உர்ஜித் படேல் ராஜினாமா செய்வதற்கான வாய்ப்புகளும் இருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|