தொழில் வளர்ச்சிக்கு உகந்த தமிழகம் : தொழில் துறை அமைச்சர் பெருமிதம் தொழில் வளர்ச்சிக்கு உகந்த தமிழகம் : தொழில் துறை அமைச்சர் பெருமிதம் ...  இன்று நடக்க போவது என்ன? இன்று நடக்க போவது என்ன? ...
முதலீடு செய்ய தைரியம் வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2018
06:52

கச்சா எண்­ணெய் விலை­யின் தொடர் வீழ்ச்சி, இந்­திய பொரு­ளா­தா­ரத்­திற்­கும், பங்­குச் சந்­தைக்­கும் கிடைத்த நல்ல முத­லு­தவி என்றே சொல்ல வேண்­டும்.இந்­தி­யா­வின் டால­ருக்­கான தேவை திடீ­ரென கூடி­னால், அதைச் சமா­ளிப்­பது என்­பது, இந்­திய அர­சு­க­ளின் தொடர் சவா­லா­கவே இருந்து வரு­கிறது. அர­சின் கொள்கை மற்­றும் சட்­டங்­கள் மூலம் ஏற்­படும் அனைத்து பொரு­ளா­தார முன்­னேற்­றங்­க­ளை­யும், ஒரே அசை­வில் நிர்­மூ­ல­மாக்­கும் தன்மை கொண்­டது கச்சா எண்­ணெய் விலை உயர்வு.

இன்­னும் சொல்­வ­தென்­றால், நம் அர­சி­யல் மாற்­றங்­களை வழி நடத்­தக்­கூ­டிய அள­வுக்கு வல்­லமை கொண்­டது கச்சா எண்­ணெய் விலை. அந்த வகை­யில், சமீ­ப­கால கச்சா எண்­ணெய் விலை உயர்­வு­கள், பெரும் அர­சி­யல் மாற்­றங்­க­ளுக்கு வழி­வ­குக்­குமோ என்ற அள­வுக்கு பங்­குச் சந்­தை­யில் சந்­தே­கங்­கள் உரு­வா­கின. அர­சும் இந்த விலை உயர்வை சமா­ளிக்க கடு­மை­யா­கப் போரா­டி­யது. அரசு நினைத்­தி­ருந்­தால், சுல­ப­மான வழி­யான, விலை குறைப்பை செய்­தி­ருக்­க­லாம். விலை குறைப்பு, வரி குறைப்பு என ஏதா­வது ஒன்­றையோ அல்­லது இரண்­டும் சேர்ந்த ஒரு அணு­கு­மு­றை­யையோ மேற்­கொண்­டி­ருக்­க­லாம்.

ஆனால், அது பொரு­ளா­தார ரீதி­யாக பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்தி, சர்­வ­தேச அள­வில், ‘ரேட்­டிங்’ குறைப்பு மற்­றும் பன்­னாட்டு முத­லீட்டு பண வெளி­யேற்­றம் ஆகி­ய­வற்­றில் முடிந்­தி­ருக்­கும்.அதே­ச­ம­யம், கச்சா எண்­ணெய் விலை ஏற்­றங்­களை, பொரு­ளா­தா­ரத்­தின் மீது நேர­டி­யாக திணித்­தால், அது வளர்ச்­சி­யை­யும், நிறு­வன லாப பெருக்­கத்­தை­யும், நிறு­வன மதிப்­பீ­டு­க­ளை­யும் பாதிக்­கும். அரசு இந்த பாதை­யைத் தான் தேர்ந்­தெ­டுத்­தது. இதில் எதை தேர்ந்­தெ­டுத்­தா­லும், பாதிப்பு என்­பது உறுதி; தாக்­கம் தான் மாறக்­கூ­டும்.

இந்­திய அரசு, பெட்­ரோ­லிய பொருட்­கள் விலை ஏற்­றம் என்ற கசப்பு மருந்­தையே கையில் எடுத்­தது. இது குறு­கிய காலத்­தில், கடும் அர­சி­யல் மற்­றும் பொரு­ளா­தார விளை­வு­களை ஆளும் தரப்பு மீது திணித்­தது. ஆனால், இந்த தேர்­வின் பின்­னால் இருந்த துல்­லிய கணக்கு, கச்சா விலை ஏற்­றம் நெடுங்­கா­லம் நீடிக்­காது என்­பதே!குளிர்­கா­லம் நோக்கி செல்­லும்­போது, இத்­த­கைய கணக்கு தப்­பா­கத்­தான் அதிக வாய்ப்பு. ஆனா­லும், மாற்று யோச­னை­களும், அணு­கு­மு­றை­களும் அதை­விட ஆபத்­தான பொரு­ளா­தார விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும் என்று கணித்து, அரசு இந்த அணு­கு­மு­றையை தேர்வு செய்­தது. இறு­தி­யில் மட்­டும், மத்­திய அரசு தன் கொள்கை நிலைப்­பாட்டை சற்றே தளர்த்தி, சிறிது விலை குறைப்பு செய்ய வழி­வ­குத்­தது.

அர­சுக்கு வேண்­டிய தரு­ணத்­தில் கச்சா எண்­ணெய் விலை பெரும் சரிவை சந்­தித்து, ரூபா­யின் மதிப்பு கூட வழி­வ­குத்­துள்­ளது. இதில், அர­சின் துணிச்­ச­லான நிலைப்­பாடு வெற்றி கண்­ட­தா­கவே தெளி­வா­கிறது. வரும் மாதங்­களில், இதே நிலைப்­பாடு தொட­ரு­மா­னால், நம்­மு­டைய வட்டி விகி­தங்­கள் மற்­றும் அர­சின் நிதி பற்­றாக்­கு­றை­கள் கட்­டுப்­பாட்­டில் வந்­து­வி­டும். அடுத்த ஆண்டு பொரு­ளா­தார வளர்ச்சி பெருக, இவை வழி­வ­குக்­கும். இதை சந்தை புரிந்து கொண்டு விட்­ட­தா­கவே தோன்­று­கிறது. வர­வி­ருக்­கும் மாநில தேர்­தல் முடி­வு­கள் ஒன்று மட்­டுமே, சந்­தை­யின் மன­தில் அச்­ச­மூட்டி வரு­கின்­றன. ஆளுங்­கட்சி ஒரு மாநி­லத்­திற்­கும் அதி­க­மாக தோல்வி அடை­யுமோ என்ற சந்­தே­கம் சந்­தை­யில் நில­வு­கிறது.

அந்த முடி­வு­கள் வெளி­யான பின், சந்­தை­யா­னது, பொரு­ளா­தார மற்­றும் அர­சி­யல் சார்ந்த ஒரு­மித்த பார்­வையை ஏற்­ப­டுத்­திக் கொள்­ளும். இடைக்­கா­லத்­தில், சந்­தை­யில் ஏற்ற இறக்­கங்­கள் அதி­கம் தென்­படும். இந்த ஏற்ற இறக்­கங்­களை நிறு­வன அள­வில் ஆராய்ந்து, தொடர்ந்து முத­லீட்டு மாற்­றங்­களை செய்து கொள்­வது நல்­லது. கடந்த, 2018ம் ஆண்டை விட, 2019ம் ஆண்டு, இந்­திய பொரு­ளா­தா­ரத்­திற்கு சாத­க­மாக அமை­யும் என்­பது ஓர­ளவு உறு­தி­யாகி வரு­கிறது. இந்த போக்கு நிலைத்து, மேலும் வலு­வ­டை­யும் என்று முடி­வெ­டுத்து, முத­லீடு செய்ய தைரி­யம் வேண்­டும். அந்த தைரி­யத்தை, உரிய தரு­ணத்­தில், உரிய துறை­களில், சரி­யான பங்­கு­களில் காட்­டு­வோ­ருக்கு மட்­டுமே முத­லீட்டு வெற்றி உறு­தி­யாக கிடைக்­கும்.

–ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)