நிதி இலக்­கு­க­ளுக்கு ஏற்ப முத­லீ­டு­கள் அமை­வ­தற்­கான வழி­கள்! நிதி இலக்­கு­க­ளுக்கு ஏற்ப முத­லீ­டு­கள் அமை­வ­தற்­கான வழி­கள்! ...  விவசாயிகள் காக்கப்படுவரா? விவசாயிகள் காக்கப்படுவரா? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சந்தை ஏற்ற இறக்கத்தை சாதகமாக்கி கொள்வது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2018
23:38

பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கமான போக்கு கவலை அளித்தாலும், இதை முதலீட்டாளர்கள் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என, வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.

கடந்த சில மாதங்­க­ளாக பங்­குச்­சந்தை ஏற்ற இறக்­க­மான போக்கை எதிர்­கொண்டு வரு­கிறது. வங்­கி­சாரா நிதி நிறு­வ­னங்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள பண­மாக்­கும் தன்மை (லிக்­வி­டிட்டி) பிரச்­சனை, ஐ.எல்., & எப்.எஸ்., சிக்­கல் உள்­ளிட்ட உள்­நாட்டு கார­ணங்­கள் முத­லீட்­டா­ளர்­கள் மத்­தி­யில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.


அமெ­ரிக்கா மற்­றும் சீனா இடை­யி­லான வர்த்­தக போர் சூழல், அமெ­ரிக்க வட்டி விகி­தம் உய­ரும் வாய்ப்பு, பிரெக்ஸ்ட், கச்சா எண்­ணெய் விலை போக்கு உள்­ளிட்ட சர்­வ­தேச கார­ணங்­களும் தாக்­கத்தை செலுத்தி வரு­கின்­றன.


வள­ரும் இந்­தியா


சந்­தை­யின் ஏற்ற இறக்­க­மான போக்கு முத­லீட்­டா­ளர்­கள் மத்­தி­யில் கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தா­லும், முத­லீடு செய்­வ­தில் இருந்து விலகி நிற்­கா­மல் இந்த போக்கை சாத­க­மாக்கி கொள்­ள­லாம். எல்லா வகை­யான சூழல்­க­ளி­லும் சந்­தை­யில் ஏற்ற இறக்­கம் இருந்து
வருகின்­றன. எனி­னும், ஏற்ற இறக்­கத்­திற்கு பிறகு சந்தை மீண்டு வந்­தி­ருப்­ப­தை­யும் உண­ர­லாம் என, வல்­லு­னர்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.


2008 பொரு­ளா­தார தேக்க நிலை­யின் போது சென்­செக்ஸ், 60 சத­வீ­தம் சரிந்­தா­லும், ஒன்­றரை ஆண்­டு­க­ளுக்கு பிறகு சென்­செக்ஸ், 150 சத­வீ­தமாக மீண்­டது.மேலும், இந்­திய வளர்ச்­சி­யின் அடிப்­படை அம்­சங்­கள் வலு­வாக இருப்­ப­தாக கரு­தப்­ப­டு­கிறது. இந்­திய வளர்ச்­சிக்கு நீண்ட கால அம்­சங்­கள் இருப்­ப­தா­க­வும் கரு­தப்­ப­டு­கிறது. இத்­த­கைய சூழ­லில், முத­லீட்­டா­ளர்­கள் குறு­கிய கால நிகழ்­வான ஏற்ற இறக்­கம் பற்றி அதி­கம் கவ­லைப்­ப­ட­ா­மல், நீண்ட கால
அடிப்­ப­டை­யி­லான அணு­கு­மு­றையை பின்­பற்ற வேண்­டும் என்­கின்­ற­னர்.


நீண்ட கால அணு­கு­மு­றையை மன­தில் வைத்து, முத­லீட்­டா­ளர்­கள் தங்­கள் முத­லீட்டு உத்­தியை வகுத்­துக்­கொள்ள வேண்­டும்.உண்­மை­யில் சந்தை ஏற்ற இறக்­கத்தை நண்­ப­னாக்கி கொண்டு, முத­லீட்­டா­ளர்­கள் பலன் பெற முடி­யும் என்­றும் வல்­லு­னர்­கள் வலி­யு­றுத்­து­கின்­ற­னர்.


சந்­தை­யில் ஏற்ற இறக்­கம் நில­வு­வது இயல்­பா­னது என்­ப­தால், இதை கண்டு அச்­சம் கொள்­ளா­மல், விலை குறைந்­தி­ருக்­கும் மதிப்பு வாய்ந்த பங்­கு­களை வாங்­கு­வதற்­கான வாய்ப்­பாக இதை பயன்­ப­டுத்­திக் ­கொள்­ள­லாம். இதற்கு பங்­கு­க­ளின் அடிப்­படை பற்­றிய முறை­யான ஆய்வு அவ­சி­யம். அதே நேரத்­தில், ஏற்ற இறக்­க­மான சூழ­லில், சந்­தை­யின் போக்கை கணித்து அதற்­கேற்ப பங்­கு­களை வாங்­கு­வது அல்­லது விற்­கும் முடிவை தவிர்க்க வேண்­டும் என்­கின்­ற­னர்.


எஸ்.ஐ.பி., முத­லீடு


அடிப்­ப­டை­யில் வலு­வான அம்­சங்­கள் கொண்ட, நல்ல நிர்­வா­கம் மற்­றும் வளர்ச்சி வாய்ப்­புள்ள பங்­கு­களில் கவ­னம் செலுத்­த­லாம். குறிப்­பாக நீண்ட கால நோக்­கத்தை மன­தில் கொண்­டால், அதற்­கேற்ற பலன் பெறும் வாய்ப்பு இருக்­கிறது. கடந்த10ஆண்­டு­க­ளின் ஏற்ற இறக்­கங்­களை மீறி, பிரிட்­டா­னியா, மாருதி மற்­றும் விஐபி இண்­டஸ்­டி­ரிஸ் போன்ற நிறு­வன பங்­கு­கள்
அதிக பலன் தந்­தி­ருப்­பதை வல்­லு­னர்­கள் சுட்­டிக் ­காட்­டு­கின்­ற­னர்.


ஏற்ற இறக்­கம் புதிய இயல்பு நிலை என்­ப­தால், அதற்­கேற்ப செயல்­பட வேண்­டும் என்­கின்­ற­னர்.பொது­வாக பங்­குச்­சந்தை முத­லீட்­ டிற்கு, சீரான முத­லீட்டு உத்­தி­யான சிஸ்­ட­மேட்­டிக் இன்­வெஸ்ட்­மண்ட் பிளான் எனும் எஸ்.ஐ.பி., முறை ஏற்­ற­தாக கரு­தப்­ப­டு­கிறது. ஏற்ற இறக்­க­மான சூழ­லில் எஸ்.ஐ.பி., முத­லீட்டை நிறுத்­தி­விடா­மல் தொடர்­வது அவ­சி­யம். எஸ்.ஐ.பி., முத­லீட்­டின் மூலம், பங்கு­கள் குறை­யும் போது அதிக யூனிட் வாங்­கு­வது, அதிகமாகும்போது குறைவான யூனிட் வாங்­கு­வ­தன் மூலம் விலை சரா­சரி­யின் பலனை பெற­லாம்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)