‘ஸ்டார்ட் அப்’ துறைக்கு ஆதரவு முதலிடத்தை குஜராத் பிடித்தது ‘ஸ்டார்ட் அப்’ துறைக்கு ஆதரவு முதலிடத்தை குஜராத் பிடித்தது ... பார்லி.,யில் துணை மானிய கோரிக்கை தாக்கல்; பொது துறை வங்கிகளுக்கு ரூ.41,000 கோடி பார்லி.,யில் துணை மானிய கோரிக்கை தாக்கல்; பொது துறை வங்கிகளுக்கு ரூ.41,000 கோடி ...
ரூ.1,000 கோடி ஒதுக்கீடு திருப்பூர் ஏற்றுமதியாளர் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2018
23:27

திருப்பூர் : நிலு­வை­யில் இருந்த, ‘ஸ்டேட் லெவிஸ்’ தொகையை வழங்க, மத்­திய ஜவு­ளித்­துறை அமைச்­ச­கம், 1,000 கோடி ரூபாய் ஒதுக்­கி­யுள்­ள­தால், ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­னர்.

பின்­ன­லாடை ஏற்­று­மதி வர்த்­தக வளர்ச்­சி­யில், திருப்­பூர் முக்­கிய பங்கு வகிக்­கிறது. அன்­னிய செலா­வ­ணியை ஈட்­டித்­த­ரும், ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு, அரசு பல்­வேறு சலுகை, மானி­யங்­களை வழங்கி ஊக்­கு­விக்­கிறது. மாநில அர­சி­டம் திரும்ப பெற இய­லாத வரி­யி­னங்­களை, ஸ்டேட் லெவிஸ் என்ற பெய­ரில், மத்­திய அரசு வழங்­கு­கிறது. ஐந்து மாதங்­க­ளாக, ஸ்டேட் லெவிஸ் தொகை வழங்­கப்­ப­டா­த­தால், ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் மிக­வும் சிர­மப்­பட்­ட­னர்.

வெளி­நாட்டு ஆர்­டர்­களை குறித்த நேரத்­தில் அனுப்ப, மத்­திய அர­சின் மானி­யம் பெரி­தும் கை கொடுக்­கிறது. பொரு­ளா­தார மந்­த­நிலை உரு­வா­ன­தால், நிலு­வை­யில் உள்ள ஸ்டேட் லெவிஸ் தொகையை விரைந்து வழங்க வேண்­டு­மென, ஏ.இ.பி.சி., எனப்­படும் பின்­ன­லாடை ஏற்­று­மதி மேம்­பாட்டு கவுன்­சில், வலி­யு­றுத்தி வந்­தது. இந்­நி­லை­யில், மத்­திய ஜவுளி அமைச்­ச­கம், ஸ்டேட் லெவிஸ் தொகை, 1,000 கோடி ரூபாயை நேற்று விடு­வித்­தது. ஓரிரு வாரங்­களில், லெவிஸ் தொகை கிடைக்­கும் என்­ப­தால், ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­ன­னர்.

ஏ.இ.பி.சி., தென் மண்­டல துணைத் தலை­வர் சக்­தி­வேல் கூறியதாவது: ஸ்டேட் லெவிஸ் தொகை விடு­விக்க வேண்­டு­மென, மத்­திய அர­சி­டம் தொடர்ந்து வலி­யு­றுத்தி வந்­தோம். அதன் பய­னாக, 1,000 கோடி ரூபாய் விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. அதே­போல், பல நாட்­க­ளாக நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த, ஷிப்­பிங் பில் தயா­ரிப்பு பணி­களும் நேற்று முதல் துவங்­கி­யுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

திருப்­பூர் ஏற்­று­ம­தி­யா­ளர் சங்க தலை­வர் ராஜா சண்­மு­கம் கூறியதாவது: சில மாதங்­க­ளாக கிடைக்­கா­மல் இருந்த, ‘ஸ்டேட் லெவிஸ்’ வழங்க, 1,000 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இதை, ஏற்­ற­ம­தி­யா­ளர்­க­ளுக்கு விரை­வில் வழங்க வேண்­டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)