சீன செயற்கை ரப்பர் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரிசீன செயற்கை ரப்பர் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி ... டிசம்பரில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.94,726 கோடியாக சரிவு டிசம்பரில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.94,726 கோடியாக சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
அடி சறுக்கிய யானை: மாருதி விற்பனை சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2019
23:52

புது­டில்லி:மாருதி சுசூகி நிறு­வ­னத்­தின் டிசம்­பர் மாத விற்­பனை, 1.3 சத­வீ­தம் அள­வுக்கு சரிவை சந்­தித்­துள்­ளது.


நாட்­டின் முன்­னணி வாகன தயா­ரிப்பு நிறு­வ­ன­மான மாருதி சுசூகி, டிசம்­பர் மாதத்­தில், 1
லட்­சத்து 28 ஆயி­ரத்து 338 வாக­னங்­களை விற்­பனை செய்­துள்­ளது.இது, அதற்கு முந்­தைய ஆண்­டின் இதே மாதத்­தோடு ஒப்­பி­டு­கை­யில், 1.3 சத­வீ­தம் குறை­வா­கும். 2017ம் ஆண்டு டிசம்­பர் மாதத்­தில், 1 லட்­சத்து 30 ஆயி­ரத்து 66 வாக­னங்­கள் விற்­பனை ஆகி­யுள்­ளன.


அதே சம­யம், உள்­நாட்­டில் விற்­பனை, 1.8 சத­வீ­தம் அள­வுக்கு அதி­க­ரித்­துள்­ளது. கடந்த டிசம்­ப­ரில், உள்­நாட்­டில், 1 லட்­சத்து 21 ஆயி­ரத்து 479 கார்­கள் விற்­பனை ஆகி­யுள்­ளன. இதுவே அதற்கு முந்­தைய ஆண்­டில், இதே மாதத்­தில், 1 லட்­சத்து 19 ஆயி­ரத்து 286 கார்­கள் மட்­டுமே விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளன.


‘ஆல்டோ, வேகன் ஆர்’ ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய, சிறிய ரக கார்­க­ளின் விற்­பனை, 14 சத­வீ­தம் அள­வுக்கு சரிவை சந்­தித்­து உள்­ளது. இந்த ரக கார்­க­ளின் விற்­பனை, கடந்த மாதத்­தில், 27 ஆயி­ரத்து 661 என்­ப­தாக இருந்­தது. இதுவே அதற்கு முந்­தைய ஆண்­டின் டிசம்­பர் மாதத்­தில், 32 ஆயி­ரத்து 146 ஆக இருந்­தது.காம்­பாக்ட் ரக கார்­களான சுவிப்ட், செலி­ரியோ, இக்­னிஸ், பலேனோ, டிசை­யர் ஆகி­ய­வற்­றின் விற்­பனை, 3.8 சத­வீ­தம் சரிவை கண்டு, 51 ஆயி­ரத்து 334 கார்­கள் என்ற அள­வில் உள்­ளன.


அதற்கு முந்­தைய ஆண்­டில் இதே ரக கார்­கள் விற்­பனை, 53 ஆயி­ரத்து 336 ஆக இருந்­தது. நடுத்­தர செடான் ரகத்தை பொறுத்­த­வரை, 4,734 சியஸ் கார்­கள் விற்­பனை ஆகி­யுள்­ளன. இதுவே அதற்கு முந்­தைய ஆண்­டில், 2,382 கார்­க­ளாக இருந்­தன.பல்­நோக்கு பயன்­பாட்டு வாக­னங்­க­ளான, விட்­டாரா பிரெஸ்ஸா, எஸ் கிராஸ், எர்­டிகா ஆகி­ய­வற்­றின் விற்­பனை, 4.9 சத­வீ­தம் அதி­க­ரித்­துஉள்­ளது.


ஏற்­று­ம­தியை பொறுத்­த­வரை, டிசம்­பர் மாதத்­தில், 36.4 சத­வீ­தம் சரிவை சந்­தித்­துள்­ளது. மொத்­தம் 6,859 கார்­கள் ஏற்­று­மதி செய்­யப்­பட்­டு உள்­ளன. இதுவே, அதற்கு முந்­தைய ஆண்­டில்,
10 ஆயி­ரத்து 780 கார்­கள் விற்­பனை செய்­யப்­பட்­டி­ருந்­தன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)