பதிவு செய்த நாள்
25 ஜன2019
07:12

சென்னை : ‘‘சென்னையில் தயாரிக்கப்படும், ஹூண்டாய் நிறுவன கார்கள், உலகில் உள்ள, 88 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன,’’ என, ஹூண்டாய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், எஸ்.எஸ்.ஸ்கிம் தெரிவித்தார்.
உலக முதலீட்டாளர்கள் மநாட்டின் நிறைவு விழாவில், அவர் பேசியதாவது:தமிழகத்தில், ‘ஹூண்டாய்’ நிறுவனம், 23 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், மின்சார வாகன உற்பத்திக்காக, ஹூண்டாய் நிறுவனம், கூடுதலாக, 7,000 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. இந்தியாவில், தமிழகத்தில் மட்டுமே, ஹூண்டாய் நிறுவனம் மின்சார கார்களை தயாரிக்கிறது.
இந்த முதலீட்டுடன், மொத்தம், 34 ஆயிரம் கோடி ரூபாய், தமிழகத்தில், ஹூண்டாய் முதலீடு செய்துள்ளது. 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி உள்ளது. மேலும், சென்னையில் தயாரிக்கப்படும் கார்கள், உலகில் உள்ள, 88 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|