பதிவு செய்த நாள்
27 ஜன2019
00:29

புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை புனரமைக்கும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக, 1,500 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.ஏர் இந்தியா, 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இந்நிறுவனத்தில், மத்திய அரசு, 76 சதவீத பங்கை வைத்துள்ளது. இதை விற்று, நிறுவனத்தை தனியார் மயமாக்க, மத்திய அரசு முயற்சித்தது.ஆனால், சில நிபந்தனைகளால், ஏர் இந்தியாவை வாங்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை.இதையடுத்து, விற்பனை திட்டத்தை கைவிட்டு, ஏர் இந்தியாவிற்கு புத்துயிரூட்ட, மத்திய அரசு முடிவு செய்தது.அதன்படி, 29 ஆயிரம் கோடி ரூபாய் கடனை, ‘ஏர் இந்தியா அசெட் ஹோல்டிங்’ நிறுவனத்திற்கு மாற்றி, துணை நிறுவனங்கள் மற்றும் அசையா சொத்துகளை விற்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.இது தவிர, நடைமுறை மூலதன தேவைகளை சமாளிக்க, நடப்பு நிதியாண்டில், 2,345 கோடி ரூபாய் பங்கு மூலதனமாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான, துணை மானிய கோரிக்கைக்கு, பார்லிமென்ட் சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது.இதையடுத்து, முதற்கட்டமாக, அடுத்த சில தினங்களில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, 1,500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட உள்ளது என, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|