போலி பில்களை பயன்படுத்தினால் ஏழு ஆண்டு சிறை என எச்சரிக்கை போலி பில்களை பயன்படுத்தினால் ஏழு ஆண்டு சிறை என எச்சரிக்கை ...  பாரத் – 22 இ.டி.எப்., நாளை வெளியீடு பாரத் – 22 இ.டி.எப்., நாளை வெளியீடு ...
தொழில் துறை உற்பத்தி 2.4 சதவீத வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
23:21

புதுடில்லி:கடந்த ஆண்டு, டிசம்பரில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 2.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, நவம்பரில், 0.5 சதவீதம் ; மறுமதிப்பீட்டில், 0.3 சதவீதமாக காணப்பட்டது.


தொழில் துறை உற்பத்தி, 2017, டிசம்பரில், 7.3 சதவீதமாக இருந்தது.நாட்டின் தொழில் துறையில்,77 சதவீத பங்களிப்பை வழங்கும், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, 2018, டிசம்பரில், 2.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, 2017, டிசம்பரில், 8.7 சதவீதமாக ஏற்றம் கண்டிருந்தது.இதே காலத்தில், சுரங்கத் துறையின் உற்பத்தி, 1.2 சதவீத வளர்ச்சியில் இருந்து, 1 சதவீதமாக பின்னடைவைக் கண்டுள்ளது.


மின் துறையின் உற்பத்தி வளர்ச்சி, மாற்றம் ஏதுமின்றி, 4.4 சதவீதமாக உள்ளது.பொறியியல் சாதனங்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 13.2 சதவீதத்தில் இருந்து, 5.9 சதவீதமாக குறைந்துள்ளது.நுகர்வோர் சாதனங்கள் துறையின் உற்பத்தி, 2.1 சதவீதத்தில் இருந்து, 2.9 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. நுகர்வோர் சாரா சாதனங்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 16.8 சதவீதத்தில் இருந்து, 5.3 சதவீதமாக குறைந்துஉள்ளது.ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, 23 தொழில் துறைகளில், 13 துறைகளின் உற்பத்தி அதிகரித்துள்ளது.


அடிப்படை பொருட்கள் மற்றும் இடை நிலைப் பொருட்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி, முறையே, 1.2 சதவீதம் மற்றும் 1.5 சதவீதமாக குறைந்துள்ளது.அடிப்படை கட்டமைப்பு மற்றும் கட்டுமான பொருட்கள் துறையின் உற்பத்தி, 10.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் – டிசம்பர் வரையிலான காலத்தில், தொழில் துறை உற்பத்தி, 4.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 3.7 சதவீதமாக இருந்தது.


சில்லரை பணவீக்கம் குறைந்தது



கடந்த, ஜனவரியில், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட, உணவுப் பொருட்களின் விலை சரிவால், சில்லரை பணவீக்கம், மேலும் குறைந்து, 2.05 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது.இது, 2018 ஜனவரியில், 5.07 சதவீதமாக இருந்தது. டிசம்பரில், 2.19 சதவீதம்; மறுமதிப்பீட்டில், 2.11 சதவீதமாக காணப்பட்டது.கடந்த, 19 மாதங்களில் இல்லாத வகையில், மதிப்பீட்டு மாதத்தில் சில்லரை பணவீக்கம் குறைந்துள்ளது.


இந்தாண்டு, ஜனவரியில், எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவின் சில்லரை பணவீக்கம், 2.2 சதவீதமாக குறைந்துள்ளது. இது, 2018, டிசம்பரில், 4.54 சதவீதமாக உயர்ந்து இருந்தது. காய்கறிகள், பழங்கள், முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலையில் ஏற்பட்ட சரிவால், சில்லரை பணவீக்கம் குறைந்துள்ளதாக, மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)