1 டன் காகித உற்பத்திக்கு 13 ஆயிரம் லிட்டர் நீர் குறைப்பு1 டன் காகித உற்பத்திக்கு 13 ஆயிரம் லிட்டர் நீர் குறைப்பு ... ‘இ – வே பில்’ முறைகேடு அதிகாரிகள் எச்சரிக்கை ‘இ – வே பில்’ முறைகேடு அதிகாரிகள் எச்சரிக்கை ...
1 டன் காகித உற்பத்திக்கு 13 ஆயிரம் லிட்டர் நீர் குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2019
23:46

சென்னை:தமிழ்­நாடு செய்­தித்­தாள், காகித நிறு­வ­னம், 2017 – 18ம் ஆண்­டில், 3.54 லட்­சம் மெட்­ரிக் டன் காகித உற்­பத்தி செய்­துள்­ளது. 1 டன் காகித உற்­பத்­திக்கு, 13 ஆயிரம் லிட்­டர் நீர் பயன்­பாடு குறைக்­கப்­பட்­டுள்­ளது.

தமிழ்­நாடு செய்­தித்­தாள், காகித நிறு­வ­னத்­தின் 2017 –18ம் ஆண்­டுக்­கான அறிக்கை, சட்­ட­ச­பை­யில் நேற்று தாக்­கல் செய்­யப்­பட்­டது.இதில், ஆண்­ட­றிக்­கை­யின் மீதான, தமி­ழக அர­சின் ஆய்­வ­றிக்கை விப­ரம்:

தமிழ்­நாடு செய்­தித்­தாள் காகித நிறு­வ­னம், தற்­போது அச்­சுத்­தாள் மற்­றும் எழு­து­தாள் உற்­பத்­தி­யில் ஈடு­பட்­டுள்­ளது. 2017 – 18ம் ஆண்­டில், 3 லட்­சத்து 53 ஆயி­ரத்து 959 மெட்ரிக் டன், காகித உற்­பத்தி செய்­துள்­ளது.மேலும், பேக்­கே­ஜிங் காகித அட்டை, 1 லட்­சத்து 41 ஆயி­ரத்து, 851 மெட்­ரிக் டன் உற்­பத்தி செய்­துள்­ளது.

இந்த ஆண்­டில், நிறு­வ­னத்­தின் ஏற்­று­மதி அளவு, 80 ஆயி­ரத்து, 822 மெட்­ரிக் டன். இது தவிர, 2017 –18ம் நிதி­யாண்­டில், நிறு­வ­னத்­தின் மொத்த கடன், 397.84 கோடி ரூபாய். வரிக்கு பிந்­தைய நஷ்­டம் 42.15 கோடி ரூபாய்.நிறு­வ­னத்­தின் காடு­ம­ய­மாக்­கல் மற்­றும் தாவ­ரம் நடும் திட்­டத்­தின் கீழ், 27 மாவட்­டங்­களில், 1.24 லட்­சம் ஏக்­கர் நிலப்­ப­ரப்பு உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. இதன் வழி­யாக, 24 ஆயி­ரத்து 179 விவ­சா­யி­கள் பய­ன­டைந்­துள்­ள­னர்.

மேலும், 1 டன் காகித உற்­பத்­திக்­கான நீரின் பயன்­பாடு, 40 ஆயிரம் லிட்­டர் என்ற அளவு, 27 ஆயிரம் லிட்­ட­ராக குறைக்­கப்­பட்­டுள்­ளது.இது காகித உற்­பத்தி தொழிற்­சா­லை­களில், மிக குறைந்த அளவு. மேலும், 'எரி சாம்­பல் பயன்­பாடு 2018 விருது, 'நீர் நிர்­வாக விருது' உள்­ளிட்ட சில விரு­து­களை, நிறு­வ­னம் பெற்­றுள்­ளது.இவ்­வாறு அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்
business news
வர்த்தக துளிகள் பிப்ரவரி 13,2019
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்
business news
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்
business news
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்
business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)