1 டன் காகித உற்பத்திக்கு 13 ஆயிரம் லிட்டர் நீர் குறைப்பு1 டன் காகித உற்பத்திக்கு 13 ஆயிரம் லிட்டர் நீர் குறைப்பு ...   உபயோகித்த சமையல் எண்ணெயிலிருந்து உயிரி எரிபொருள்  புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்த அரசு பரிசீலனை உபயோகித்த சமையல் எண்ணெயிலிருந்து உயிரி எரிபொருள் புதிய ... ...
‘இ – வே பில்’ முறைகேடு அதிகாரிகள் எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2019
23:49

மாநி­லங்­க­ளுக்கு உள்ளே எடுத்­துச் செல்­லும் பொருட்­க­ளுக்கு பெறும், ஒரு, ‘இ – வே பில்’ பதி­வில், பல முறை சரக்­கு­கள் எடுத்­துச் சென்­றால், மதிப்­புக்கு ஏற்­ற­வாறு அப­ரா­தம் விதிக்­கப்­படும் என, வணிக வரி அதி­கா­ரி­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

மாநி­லங்­க­ளுக்­கி­டையே, 50 ஆயி­ரம் ரூபாய்க்கு மேல் சரக்­கு­களை எடுத்­துச் செல்ல, ‘ஆன்­லைன்’ மூலம் அனு­மதி பெறும், இ – வே பில் நடை­முறை, நாடு முழு­வ­தும், 2018ம் ஆண்டு, ஏப்., 1ல் அம­லுக்கு வந்­தது.மாநி­லத்­துக்கு உள்ளே, 1 லட்­சம் ரூபாய் மதிப்­புக்கு மேல் எடுத்­துச் செல்­லப்­படும் அனைத்து பொருட்­க­ளுக்­கும், ஆன்லைன் இ – வே பில் கட்­டா­யம் பெற வேண்­டும். இ – வே பில் பெறாத லாரி­க­ளுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், ஒரு இ – வே பில்­லில், பல முறை சரக்­கு­களை எடுத்­துச் செல்­வ­தாக குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது.இது குறித்து, வணிக வரி அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது:மாநி­லங்­க­ளுக்­கு­இடையே எடுத்­துச் செல்­லும் சரக்­கு­க­ளுக்கு, இ – வே பில் மற்­றும் உரிய ஆவ­ணங்­கள் சரி­யாக இருக்­கின்றன. ஆனால், மாநி­லத்­துக்கு உள்ளே எடுத்­துச் செல்­லும் பொருட்­க­ளுக்கு, இ – வே பில், உரிய ஆவ­ணங்­கள் சரி­யாக இருப்­ப­தில்லை.

ஒரு, இ – வே பில் பதிவு செய்து, பல முறை சரக்­கு­களை எடுத்­துச் செல்­கின்­ற­னர். ஒரு லாரி­யில் ஏற்­றும் சரக்­கிற்கு, 2 லட்­சம் ரூபாய்க்கு கீழ் மதிப்பு நிர்­ண­யித்து, பில் பதிவு செய்­கின்­ற­னர்.இவற்றை துல்­லி­ய­மாக ஆய்வு செய்­தால் மட்­டுமே, கண்­டு­பி­டிக்­கும் நிலை உள்­ளது.

இதற்கு முக்­கிய கார­ணம், இ – வே பில் பதி­வுக்­கான அவ­கா­சம், 24 மணி நேரம் இருப்­பதே.இந்த கால அவ­கா­சத்தை 12 மணி நேர­மாக குறைத்­தால், இந்த தவ­று­கள் நடப்­பதை குறைக்­க­லாம். மேலும், இது போன்ற மோச­டி­யில் ஈடு­படும், லாரி­கள், நிறு­வ­னங்­கள் மீது, மதிப்­புக்­கேற்­ற­வாறு அப­ரா­தம் விதிக்­கப்­படும்.இவ்­வாறு, அவர்­கள் கூறி­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் பிப்ரவரி 13,2019
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)