பதிவு செய்த நாள்
19 பிப்2019
06:55

புதுடில்லி : அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனங்களின் அடமானப் பங்குகளை, வரும் செப்டம்பர் வரை விற்க மாட்டோம் என, பெரும்பான்மையான நிதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதனால், நேற்று, ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்பிராஸ்ட்ரக்சர், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ், ரிலையன்ஸ் நேவல் அண்டு இன்ஜினியரிங் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள், 5 –-11 சதவீதம் வரை உயர்ந்தன. பங்குகளை அடமானம் வைத்து கடன் தந்த நிறுவனங்களுக்கு, ஏற்கனவே நிர்ணயித்தபடி, அசல் மற்றும் வட்டி தருவதாக, ரிலையன்ஸ் ஒப்புக் கொண்டுள்ளது.
அத்துடன், ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தில், 30 சதவீத பங்குகளை வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளது. இதையடுத்து, இரு தரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த தகவல் வெளியானதை அடுத்து, ரிலையன்ஸ் குழும பங்குகள் விலை உயர்ந்தது.எல் அண்டு டி., எடல்வைஸ் குழுமங்கள், அனில் அம்பானி நிறுவனங்களின் பங்குகளை விற்றதால், சமீபத்தில் அவற்றின் விலை வெகுவாக சரிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|