பதிவு செய்த நாள்
26 பிப்2019
23:29

சிறு, குறு நிறுவனங்களுக்கான, ‘எம்.எஸ்.எம்.இ., சமாதான் கவுன்சிலில்’ இதுவரை, 13 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 9,000 விண்ணப்பங்கள், வழக்குகளாக மாற்றப்பட்டுள்ளன என, மத்திய, எம்.எஸ்.எம்.இ., துறை தெரிவித்துஉள்ளது.
மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சகம் சார்பில், எம்.எஸ்.எம்.இ., சமாதான் திட்டம் துவங்கப்பட்டது.இந்த திட்டத்தின் வழியாக, குறு, சிறு நிறுவனங்களுக்கு, பெரு நிறுவனங்களுடன் ஏற்படும் நிதி சிக்கல்கள் தீர்த்து வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தை எளிமைப்படுத்த, 2017ம் ஆண்டில், ஆன்-லைன் வசதி துவங்கப்பட்டது. இதன் வழியாக, இதுவரை, 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், சமாதான் கவுன்சிலுக்கு வந்துள்ளன. இது தொடர்பான விபரங்கள், எம்.எஸ்.எம்.இ., சமாதான் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதன் விபரம்:எம்.எஸ்.எம்.இ., சமாதான் கவுன்சிலில், இதுவரை மொத்தம், 13 ஆயிரத்து, 8 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், குறு, சிறு நிறுவனங்களுக்கு கிடைக்க வேண்டிய தொகை, 3,677 கோடி ரூபாய்.இந்த விண்ணப்பங்களில், 124 கோடி ரூபாய் மதிப்புள்ள விண்ணப்பங்கள், கொள்முதல் செய்பவர்களால் முடித்து வைக்கப்பட்டுள்ளது. 169 கோடி ரூபாய் மதிப்புள்ள, 748 விண்ணப்பங்களை சமாதான் கவுன்சில் முடித்து வைத்துள்ளது. இதில், மாநில அளவில், 1,342 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்திலிருந்து, 71 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், ஒன்பது விண்ணப்பங்கள், 15 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட்டவை. மத்திய பிரதேசத்தில் அதிகபட்சமாக, 261 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மீதம் உள்ள விண்ணப்பங்கள், வழக்குகளாக மாற்றப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|