பதிவு செய்த நாள்
27 மார்2019
07:05

புதுடில்லி: வாராக் கடன் தொடர்பாக, திவால் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கக் கோரி, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம், 12 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த, 2016, மே மாதம், திவால் சட்டம் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின் கீழ், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அவற்றில், கடனை திரும்பத்தராத நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை எடுக்கக் கோரி, வங்கிகள், நிதி நிறுவனங்கள் விண்ணப்பிக்கின்றன. அவை, பரிசீலிக்கப்பட்டு, தீர்ப்பாயம் அனுமதி வழங்கும் பட்சத்தில், திவால் நடவடிக்கை துவங்கும்.
இது குறித்து, மத்திய நிறுவன விவகாரங்கள் துறை செயலர், இன்ஜெட்டி ஸ்ரீனிவாஸ் கூறியதாவது:திவால் சட்டம் அமலுக்கு வந்த பின், தற்போது வரை, அச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயங்களில், 12 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.ஒரு சில தீர்ப்பாயங்களில், தாக்கல் செய்த விண்ணப்பங்களுக்கு நிகரான அளவிற்கு, வழக்குகள் பைசலாகின்றன. மொத்த விண்ணப்பங்களில், 4 ஆயிரத்து 500 வழக்குகள், தீர்ப்பாயத்திற்கு வெளியில் தீர்வு காணப்பட்டு உள்ளன. அவற்றின் மூலம், 2 லட்சம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. 1,500 விண்ணப்பங்கள் மீது, திவால் நடவடிக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 6 ஆயிரம் விண்ணப்பங்கள், பரிசீலனையில் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
தீர்வு காண வேண்டும்:
தற்போது, உணவு சாரா துறையின் கடன், 77 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதில், தொழில் மற்றும் சேவைகள் துறையின் பங்கு, முறையே, 26 லட்சம் கோடி ரூபாய் மற்றும் 21 லட்சம் கோடி ரூபாய். இந்த இரு துறைகளின் மொத்த கடன், 47 லட்சம் கோடி ரூபாய். இது, உணவு சாரா துறையின் மொத்த கடனில், 70 சதவீதம். அதனால், எஞ்சிய, 30 சதவீத கடன் பிரச்னைக்குத் தான் தற்போது தீர்வு காண வேண்டும்.
–இன்ஜெட்டி ஸ்ரீநிவாஸ்,மத்திய நிறுவன விவகாரங்கள் துறை செயலர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|