பதிவு செய்த நாள்
31 மார்2019
02:19

பி.எஸ்.என்.எல்., ‘3ஜி’யில் துவக்கப்படும், ‘4ஜி’ சேவையில், உண்மையான, 4ஜி அலைக்கற்றைக்கு இணையான வேகம் கிடைக்காது; இதற்கான சிக்னல் கோபுரம் உள்ள இடங்களில் மட்டுமே இந்த சேவை கிடைக்கும் என, இதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொது துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., 4ஜி சேவையில் இதுவரை ஈடுபடவில்லை. தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, இது மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. தற்போது, நாடு முழுவதும் உள்ள, பி.எஸ்.என்.எல்.,லின் பல்வேறு வட்டங்களில், 4ஜி சேவை துவங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஆனால், இது உண்மையில், 4ஜி சேவை கிடையாது எனக் கூறுகின்றனர்.இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 4ஜி சேவை துவங்குவதற்கான அலைக்கற்றை, இதுவரை ஒதுக்கப்படவில்லை. 4ஜி சேவை செயல்பட, 2,100 மெகாஹெட்ஸ் அலைவரிசை தேவை. இந்த அலைவரிசையில், இன்டர்நெட் வேகம் அதிகமாக இருக்கும். ஆனால், பி.எஸ்.என்.எல்.,லில், 3ஜி அலைக்கற்றை மட்டுமே உள்ளது.
இதற்கான சிக்னல் கோபுரங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.தற்போது, 3ஜி அலைக்கற்றையில், 4ஜி சேவைக்கு இணையாக, இன்டர்நெட் வேகத்தை அளிக்கும் வகையில், சில தொழில்நுட்பங்களுடன், சிக்னல் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன.இந்த சிக்னல் கோபுரங்கள், ஒரு சில இடங்களில் மட்டுமே நிறுவப்பட்டுள்ளன. இவை நிறுவப்பட்ட இடங்களில் மட்டுமே, 4ஜி சேவைக்கு இணையான இன்டர்நெட் வேகம் கிடைக்கும்; பிற இடங்களில் கிடைக்காது.
இதனால், இந்த சேவையை, 4ஜி சேவை எனக் கூற முடியாது. 4ஜி அலைக்கற்றை ஒதுக்கிய பின்னரே, முழுமையான வேகம் கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.சென்னையில், ‘4ஜி’பி.எஸ்.என்.எல்., சென்னை வட்டத்தில், 4ஜி சேவையை, இதன் தலைமை பொது மேலாளர், எஸ்.எம்.கலாவதி துவக்கி வைத்துள்ளார். தற்போது, சென்னை வட்டத்தின் கீழ் உள்ள, தேவரியம்பாக்கம், கருங்குழி, பி.வி.களத்துார், பளூர், ராஜாகுளம், கோவிந்தவாடி உட்பட சில இடங்களில், 4ஜி சேவை கிடைக்கிறது. இந்த சேவை படிப்படியாக, 200 இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|