பதிவு செய்த நாள்
01 ஏப்2019
06:57
வாகன காப்பீடு பெறுவதில், மேலும் அதிக விழிப்புணர்வு தேவை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக கோகோ பை டி.எச்.எப்.எல்., ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:ஆய்வில் பங்கேற்றவர்களில், 10ல் ஏழு பேர் போக்குவரத்து காவல் துறையிடம் பிடிபட்ட பின், காப்பீடு வாங்குவதில் கவனம் செலுத்தி உள்ளனர். மும்பை, டில்லி, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில், 40 சதவீதம் பேர் போக்குவரத்து காவல் துறையிடம் சிக்கிய பின்னும் கூட, காப்பீட்டை புதுப்பிக்க தவறி உள்ளனர்.
பலரும், காப்பீடு நிறுவனம் பாலிசி காலம் முடிவடைந்தது பற்றி நினைவு படுத்த தவறியது, பாலிசியை புதுப்பிக்க தவறியதற்கான காரணம் என, கூறியுள்ளனர். ஒரு சிலர், பாலிசியை புதுப்பிக்க ஆகும் செலவை விட, அபராதம் செலுத்துவது செலவு குறைந்தது என கருதுகின்றனர். 26 சதவீதம் பேர், இப்படி காலாவதியான பாலிசியை வைத்திருக்கின்றனர்.
வாகன காப்பீடு பெறுவது கட்டாயம் என்ற நிலையிலும், பலரும் காப்பீடு பெறுவது தொடர் பாக, போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதை இந்த ஆய்வு உணர்த்துகிறது.வாகன காப்பீடு பெறும் போது பாலிசி தொகை, தள்ளுபடி போன்ற அம்சங்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல், பயன்கள், சேர்க்கை பலன்கள் உள்ளிட்ட அம்சங்களை கவனிக்க வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|