வாகன விற்பனை விலை உயருகிறது: நாளை முதல் அமலுக்கு வருகிறது வாகன விற்பனை விலை உயருகிறது: நாளை முதல் அமலுக்கு வருகிறது ... தேர்­த­லும் பொதுத் துறை பங்­கு­களும் தேர்­த­லும் பொதுத் துறை பங்­கு­களும் ...
வங்கி சேமிப்பு கணக்கை சிறப்பாக நிர்வகிக்கும் வழிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2019
07:10

சேமிப்பிற்கும், முதலீட்டிற்கும் உதவும் வகையில் வங்கி சேமிப்பு கணக்குகளை சிறந்த முறையில் நிர்வகிப்பது, உங்கள் நிதி எதிர்காலத்திற்கு வலு சேர்க்கும்.

உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி சேமிப்பு கணக்குகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அடிக்கடி வேலை மாறும் தன்மை கொண்டவர்களுக்கு, புதிய நிறுவனத்தில் சேரும் போது, சம்பளத்திற்கான வங்கி கணக்கும் புதிதாக துவங்கப்படுகிறது. இளம் வயதினரை பொருத்தவரை, முதல் வங்கி கணக்கை பெற்றோர் துவக்கி அளிக்கின்றனர். அதன் பிறகு, தேவைக்காக அவர்கள் மற்றொரு கணக்கை துவக்கி கொள்கின்றனர். ஒரு சிலர், வங்கியாளர் கேட்டுக்கொண்டதற்காக சேமிப்பு கணக்கை துவக்கின்றனர்.

இப்படி பல காரணங்களால், பல்வேறு சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கும் நிலை பலருக்கு இருக்கலாம். ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கும் போது, அவற்றை பராமரிப்பதில் சிக்கல் ஏற்படலாம். மேலும், சேமிப்பு கணக்குகள் முற்றிலும் இலவசமானவை அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவற்றுக்கு என ஒரு செலவு இருக்கிறது. சேமிப்பு கணக்குகள் பல்வேறு சேவை கட்டணங்களை வசூலிக்கின்றன. அவற்றுக்கான குறைந்த பட்ச தொகையை பராமரிக்க வேண்டும். இவ்வாறு செய்யத்தவறினால் அபராதம் செலுத்த வேண்டும். இவை செலவுகளை அதிகமாக்கும்.

எனவே, அதிகமான சேமிப்பு கணக்குகளை வைத்திருப்பதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற கணக்குகளை மூடி விட வேண்டும். சரி, ஒருவர் எத்தனை சேமிப்பு கணக்குகளை வைத்திருப்பது ஏற்றதாக இருக்கும்? இந்த கேள்விக்கு பதிலாக குறிப்பிட்ட எண்ணிக்கை எதுவும் இல்லை என்றாலும், இரண்டு அல்லது மூன்று சேமிப்பு கணக்குகளே போதுமானவை என, கருதப்படுகின்றன. முதல் சேமிப்பு கணக்கை வருமானத்திற்கான கணக்காக வைத்திருக்கலாம். இந்த கணக்கையே சேமிப்பு மற்றும் முதலீட்டிற்கானதாகவும் வைத்துக் கொள்ளலாம். இரண்டாவது கணக்கை செலவுகளுக்கு என்று வைத்துக் கொள்ளலாம்.

மாதாந்திர செலவுகள், பில் தொகை செலுத்துவது போன்றவற்றை செலவு கணக்கில் இருந்து மேற்கொள்ளலாம். இது, பட்ஜெட்டிற்கு ஏற்ப செயல்படவும் உதவும். தேவை எனில், முதலீட்டிற்கு என்று தனி கணக்கும் வைத்துக் கொள்ளலாம். ஆனால், இதையும் வருமான கணக்கு மூலமே மேற்கொள்ளலாம்.மாத சம்பளம் தவிர, முதலீட்டின் பலம், டிவிடெண்ட் வருமானம் போன்றவை இந்த கணக்கில் வரவு வைக்கலாம். இவை தவிர மற்ற கணக்குகள் தேவையற்றவை. இதே போல, கூட்டாக சேமிப்பு கணக்கை வைத்துக்கொள்வது தொடர்பான கேள்வியும் எழலாம்.

இந்த கேள்விக்கான பதில், சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப உறவு நிலை மற்றும் அவர்களது நிதி பழக்கம் சார்ந்து அமையும். நல்ல நிதி புரிதல், கூட்டு இலக்குகள், கூட்டு பொறுப்புகள் என இருக்கும் போது, கூட்டு சேமிப்பு கணக்கு ஏற்றதாக இருக்கும். எப்படி இருந்தாலும், இருவரில் யார் ஒருவர் வேண்டுமானாலும் இயக்க கூடிய வகையில் கூட்டு சேமிப்பை கணக்கை அமைத்துக் கொள்வது நல்லது.பல சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கும் போது, சில கணக்குகளை இயக்க மறந்துவிடும் நிலையும் ஏற்படலாம்.

ஒரு சில கணக்குகளில் பல ஆண்டுகளாக பணம் பயன்படுத்தப்படாமல் கூட இருக்கலாம். தவிர, அந்த கணக்குகளில், டெபிட் கார்டு சேவை போன்றவற்றுக்கான கட்டணமும் பிடித்தம் செய்யப்படலாம். இந்த காரணங்களுக்காகவும் சேமிப்பு கணக்குகளை முறைப்படுத்தி, தேவைப்படும் கணக்குகளை மட்டுமே பராமரிக்க வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஏப்ரல் 01,2019
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)