‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் இந்தியாவை பாதிக்காது:ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு உறுதி ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் இந்தியாவை பாதிக்காது:ஐரோப்பிய நாடுகளின் ... ... வீட்­டுக்­க­டனை மாற்­றும் முன்  கவ­னிக்க வேண்­டிய அம்­சங்­கள் வீட்­டுக்­க­டனை மாற்­றும் முன் கவ­னிக்க வேண்­டிய அம்­சங்­கள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
புதிய நிதி­யாண்­டில் உங்­க­ளுக்­கான நிதி தீர்­மா­னங்­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2019
23:37

நிதி திட்­ட­மி­டல் என்­பது ஒரு தொடர் செயல்­பா­டா­கும். அவ்­வப்­போது உங்­கள் திட்­ட­மி­டலை ஆய்வு செய்து, முன்­னேற்­றம் மற்­றும் முத­லீட்­டில் தேவை­யான மாற்­றங்­களை ஆய்வு செய்­வது அவ­சி­யம். புதிய நிதி­யாண்­டின் துவக்­கம் இதற்கு சரி­யான கால­மா­கும். சரி­யான நிதி வாய்ப்­பு­களை பயன்­ப­டுத்­திக் ­கொள்­ள­வும் இது வழி­வ­குக்­கும். புதிய நிதி­யாண்­டில் இதற்கு உத­வக்­கூ­டிய நிதி தீர்­மா­னங்­களை பார்க்­க­லாம்:

வரி சேமிப்பு: வரி சேமிப்பை தனியே மேற்­கொள்­வ­தை­யும், கடைசி நேர அவ­ச­ரத்­தில் மேற்­கொள்­வ­தை­யும் தவிர்க்க வேண்­டும். இதற்கு வரி சேமிப்பை நிதி திட்­ட­மி­ட­லில் அங்­க­மாக்கி கொள்ள வேண்­டும். வரி சேமிப்­பிற்­காக மட்­டும் முத­லீட்டை மேற்­கொள்­ளா­மல், அவை நிதி இலக்­கு­க­ளுக்கு பொருத்­த­மா­க­வும் இருப்­பது முக்­கி­யம்

காப்­பீடு பாது­காப்பு: போது­மான காப்­பீடு இருக்­கி­றதா என்­பதை உறுதி செய்து கொள்ள வேண்­டும். ஆயுள் காப்­பீடு, மருத்­துவ காப்­பீடு தேவை­கள், வாழ்க்கை நிலைக்கு ஏற்ப மாறக்­கூ­டி­யவை. இவை பொருத்­த­மாக இருக்­கி­றதா என ஆய்வு செய்து, தேவை எனில் காப்­பீடு பாது­காப்பை அதி­க­ரிக்க வேண்­டும்.

ரொக்க வரத்து நிர்­வா­கம்: உங்­கள் ரொக்க வரத்தை சரி­யாகநிர்­வ­கிப்­பது மிக­வும் முக்­கி­யம். இது, உங்­கள் வரு­மா­னம் மற்­றும் செல­வு­களை கண்­கா­ணிக்க உத­வும். இரண்­டை­யும் அறிந்­தி­ருப்­பது சேமிப்­பி­லும், முத­லீட்­டி­லும் உதவி செய்­யும். செல­வு­களை கண்­கா­ணித்­தால் மட்­டுமே வீண் செல­வு­களை தவிர்ப்­பது சாத்­தி­ய­மா­கும்.


முத­லீடு ஆய்வு: சரி­யான முத­லீ­டு­களை தேர்வு செய்­வது போலவே, அவற்றை அடிக்­கடி ஆய்வு செய்­வ­தும் அவ­சி­யம். நீங்­கள் செய்­துள்ள முத­லீ­டு­கள் தரும் பலன், அவற்­றுக்­கான நிதி இலக்­கு­க­ளுக்கு ஏற்ப அமைந்­துள்­ள­னவா என்­பதை அறிந்­தி­ருக்க வேண்­டும். முத­லீ­டு­கள் தரும் பலனை ஆய்வு செய்­வது இதற்கு உத­வும்.

யூக முத­லீடு: உட­னடி பல­னுக்­காக குறு­கிய கால முத­லீ­டு­களை யூகத்­தின் அடிப்­ப­டை­யில் மேற்­கொள்­வதை தவிர்க்க வேண்­டும். இவை ரிஸ்க் மிகுந்­தவை. நண்­பர்­கள் குறிப்பு அல்­லது சந்தை போக்கு அடிப்­ப­டை­யி­லான குறிப்பு அடிப்­ப­டை­யில் முத­லீட்டு முடி­வு­களை மேற்­கொள்­வதை தவிர்க்க வேண்­டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)