பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பம்பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பம் ... பங்குச் சந்தை பங்குச் சந்தை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
உங்­கள் முத­லீடு தொடர்­பான இடர்­களை நிர்­வ­கிப்­பது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2019
23:55

சரியான முதலீட்டை தேர்வு செய்யும் போது, அவை தரும் பலன்களை மட்டும் பார்க்காமல், தொடர்புடைய இடர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


பெரும்­பா­லான முத­லீட்­டா­ளர்­கள், ‘ரிஸ்க்’ எனப்­படும் இடர்­கள் தொடர்­பாக தெளி­வான புரி­தலை பெற்­றி­ருப்­ப­தில்லை. எல்லா முத­லீட்­டி­லும் ரிஸ்க் உண்டு. முத­லீடு அளிக்­கும் பலன்­க­ளுக்கு ஏற்ப ரிஸ்க் அமை­யும். முத­லீடு செய்­யும் போது, அவை தொடர்­பான இடர்­க­ளை­யும் உணர்ந்து செயல்­பட வேண்­டும்.


பாது­காப்பை பிர­தா­ன­மாக நாடும் முத­லீட்­டா­ளர்­கள், எல்லா முத­லீட்­டி­லும் ரிஸ்க் அம்­சத்தை பார்க்­கின்­ற­னர் என்­றால், தீவிர முத­லீட்­டா­ளர்­கள் தங்­க­ளால் எந்த வகை ரிஸ்­கை­யும் எதிர்­கொள்ள முடி­யும் என, நம்­பு­கின்­ற­னர். இரண்டு போக்­கு­க­ளுமே ஆபத்­தா­னது.முத­லீடு தொடர்­பான ரிஸ்க், முத­லீடு செய்­ப­வ­ரின் ரிஸ்க் தன்­மைக்­கும் பொருத்­த­மாக இருக்க வேண்­டும்.


பொது­வாக இளம் முத­லீட்­டா­ளர்­கள் எனில், அதிக அள­வி­லான ரிஸ்க் எடுக்க கூடி­ய­வர்­க­ளாக கரு­தப்­ப­டு­கின்­ற­னர். அதே நேரத்­தில் ஓய்வு காலத்தை நெருங்­கி­ய­வர்­கள், பாது­காப்­பான முத­லீட்­டையே அதி­கம் நாட வேண்­டும். ஒரு­வர் தன் ரிஸ்க் தன்­மையை புரிந்து கொண்டு, அதற்­கேற்ப முத­லீ­டு­களை தேர்வு செய்­வது, நிதி திட்­ட­மி­ட­லில் முக்­கிய பங்கு வகிக்­கிறது.


இதற்கு முத­லீடு மீது தாக்­கம் செலுத்­தும் பல­வ­கையான, ரிஸ்க் அம்­சங்­களை முத­லில் புரிந்து கொள்ள வேண்­டும். முத­லில் வருவது மார்க்­கெட் ரிஸ்க். சந்­தை­யின் ஏற்ற இறக்­க­மான தன்­மை­யால், முத­லீட்­டின் மீது உண்டா­கக்­கூ­டிய தாக்­கத்தை இது குறிக்­கிறது. மார்க்­கெட் ரிஸ்கை முழு­வ­தும் தவிர்க்க முடி­யாது.


இதை எதிர்­கொள்ள சிறந்த வழி, சம­பங்கு, கடன் சார் முத­லீடு, தங்­கம் என, பல்­வேறு வகை­யான முத­லீட்டு வாய்ப்­பு­களில் பர­வ­லாக முத­லீடு செய்­தி­ருப்­பது தான். இதே போல, வட்டி விகித போக்­கால் ஏற்­படும் தாக்­கம் வட்டி விகித ரிஸ்க் என, கருதப்­ப­டு­கிறது.


பி.பி.எப்., வைப்பு நிதி உள்ளிட்ட கடன்­சார் முத­லீ­டு­களில் இந்த ரிஸ்க் உண்டு. இந்த வகை
முத­லீ­டு­களை சரி­யாக புரிந்து கொண்­டால், வட்டி விகித ரிஸ்கை சிறப்­பாக நிர்­வ­கிக்­க­லாம்.
கிரெ­டிட் ரிஸ்க் என்­பது, குறிப்­பிட்ட நிறு­வ­னத்­தால் வாக்­கு­றுதி அளித்­த­படி பணத்தை திருப்­பித்­தர முடி­யா­மல் போவ­தால் ஏற்­ப­டக்­கூ­டி­யது. தற்­போது மியூச்­சு­வல் பண்ட் துறை­யில் இந்த வகை ரிஸ்க் சார்ந்த பிரச்­னை நில­வு­கிறது.


கிரெ­டிட் ரிஸ்க் கொண்ட முத­லீ­டு­கள் எனில், அவற்­றுக்­கான தரச்­சான்­றி­தழை முக்­கி­ய­மாக
கவ­னிக்க வேண்­டும். மேலும், அதிக ரிஸ்க் எடுக்­கும் திறன் இல்­லாத முத­லீட்­டா­ளர்­கள், இந்த வகை முத­லீட்டை தவிர்ப்­பது நல்­லது. இதே போல, குறிப்­பிட்ட துறை சார்ந்த முத­லீடு எனில் துறை சார்ந்த ரிஸ்க் உண்டு. அந்த துறை எழுச்சி பெற்­றால், முத­லீடு அதிக பலன் தரும். துறை­யில் சரிவு ஏற்­பட்­டால் முத­லீட்­டின் பலனை பாதிக்­கும். இந்த வகை ரிஸ்கை எதிர்­கொள்­ள­வும், முத­லீடு பர­வ­லாக்­கமே சிறந்த வழி.


இவை ­த­விர, வாழ்­வி­யல் ரிஸ்க், பழக்க வழக்க ரிஸ்க் உள்­ளிட்­ட­வை­யும் இருக்­கின்­றன. வாழ்­வி­யல் சார்ந்த தேவை­க­ளுக்­கான செல­வு­கள், பட்­ஜெட்டை மீறி செலவு செய்ய வைக்­கும். இது சேமிப்­பை­யும், முத­லீட்­டை­யும் பாதிக்­கும். மேலும், முத­லீட்­டின் மற்ற
அம்­சங்­களை கருத்­தில் கொள்­ளா­மல், அதன் பலனை மட்­டும் கருத்­தில் கொண்டு முத­லீடு செய்­வது பழக்க வழக்க ரிஸ்­காக அமை­கிறது.


ஒரு­வர் தன் ரிஸ்க் தன்­மையை புரிந்து கொண்டு செயல்­ப­டு­வ­தன் மூலம் இதை சரி செய்­ய­லாம். ரிஸ்கை புரிந்து கொள்­ளும் போது எவ்­வ­ளவு ரிஸ்க் எடுக்­க­லாம் என்­பதை எளி­தாக தீர்­மா­னிக்க முடி­யும்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் முதன்முறையாக தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 11,800 புள்ளிகளை கடந்து சாதனை ... மேலும்
business news
புதுடில்லி:பூக்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள, ‘பெர்ன்ஸ் என் பீட்டல்ஸ்’ நிறுவனம், ... மேலும்
business news
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம், 7 சதவீதத்துக்குள் அடங்கியே பயணிக்கும் போது, பங்குச் சந்தையின் ... மேலும்
business news
பங்குச் சந்தை ஏப்ரல் 14,2019
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி, தொடர் உயர்வுக்கு பிறகு, கடந்த இரு வாரங்களாக, சிறிய அளவிலான ஏற்றத் ... மேலும்
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் மூன்றாவது நாளான இன்று(ஏப்.,10) சரிவுடன் துவங்கி உள்ளன. இன்றைய ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)