பதிவு செய்த நாள்
23 ஏப்2019
23:37

கடந்த ஓராண்டில், தமிழகத்தில், ஜி.எஸ்.டி., பயனை வழங்காத, ஏழு நிறுவனங்கள் மீது, தேசிய மிகை லாபத் தடுப்பு கண்காணிப்பு குழுவிடம், நுகர்வோர் புகார் அளித்துள்ளனர்.
ஜி.எஸ்.டி.,யை பயன்படுத்தி வர்த்தகர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதை தடுக்கும் வகையில், ‘தேசிய மிகை லாபத் தடுப்பு ஆணையம்’ அமைக்கப்பட்டது. மத்திய அரசு, ஜி.எஸ்.டி.,யை குறைப்பதால் கிடைக்கும் பயனை, நிறுவனங்கள், நுகர்வோருக்கு வழங்க வேண்டும். அதாவது, பொருட்களின் விலையை குறைக்க வேண்டும். அவ்வாறு, விலை குறைப்பு செய்யாமல் உள்ள நிறுவனங்கள் மீது, நுகர்வோர் இந்த ஆணையத்தில் புகார் தெரிவிக்கலாம்.
இது குறித்து, வணிக வரி அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், தேசிய மிகை லாபத் தடுப்பு கண்காணிப்பு குழுவுக்கு, 2018 ஜன., முதல், இந்தாண்டு மார்ச் வரை, ஏழு புகார்கள் வந்துள்ளன. மேலும், நிலைக் குழுவிலிருந்து இரண்டு புகார்கள் என, மொத்தம் ஒன்பது புகார்கள் மட்டுமே வந்துள்ளன. இவற்றில், ஐந்து புகார்கள் மத்திய நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன; நான்கு புகார்கள் முடித்து வைக்கப்பட்டன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|