பதிவு செய்த நாள்
27 ஏப்2019
00:33

புதுடில்லி: நிறுவனங்கள், ‘ஐ.ஜி.எஸ்.டி.,’யில் பெறும் உள்ளீட்டு வரிப் பயனை, மத்திய, மாநில ஜி.எஸ்.டி., நிலுவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என, ‘சி.பி.ஐ.சி.,’ எனப்படும், மத்திய மறைமுக மற்றும் சுங்க வரி வாரியம் தெரிவித்துள்ளது.
சி.பி.ஐ.சி., அறிவிப்பு
இது குறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:நிறுவனங்கள், இறக்குமதி செய்யும் மூலப் பொருட்களுக்கும், மாநிலங்கள் இடையிலான பொருட்கள் விற்பனைக்கும், ‘ஐ.ஜி.எஸ்.டி.,’ன் கீழ் வரி செலுத்துகின்றன.அதில் கிடைக்கும் உள்ளீட்டு வரிப் பயனை, நிறுவனங்கள் திரும்பப் பெறுகின்றன.இந்நிலையில், ‘ஐ.ஜி.எஸ்.டி.,யில் சேகரமாகும் உள்ளீட்டு வரிப் பயனை, மத்திய, மாநில அரசுகளுக்கு செலுத்தும், ‘சி.ஜி.எஸ்.டி., மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி.,’யில் கழித்துக் கொள்ளலாம்’ என, கடந்த மாதம், ‘சி.பி.ஐ.சி.,’ அறிவித்தது.
குழப்பம் தீர்ந்தது
எனினும், உள்ளீட்டு வரிப் பயனை, முதலில், ஐ.ஜி.எஸ்.டி., நிலுவைக்கு பயன்படுத்த வேண்டும் என்றதால், குழப்பம் நிலவியது.அதை தீர்க்கும் வகையில், சி.பி.ஐ.சி.,யின் அறிக்கை அமைந்துள்ளது. அதன்படி, இறக்குமதி நிறுவனங்கள், ஐ.ஜி.எஸ்.டி.,யில் பெறும் உள்ளீட்டு வரிப் பயனை, மத்திய, மாநில அரசுகளின், சி.ஜி.எஸ்.டி., மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி., நிலுவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.அதுபோல, மாநிலங்கள் இடையிலான சரக்கு விற்பனையில் செலுத்தும், ஐ.ஜி.எஸ்.டி.,யில் பெறும் உள்ளீட்டு வரிப் பயனையும், மத்திய, மாநில அரசுகளின், வரி நிலுவைக்கு பயன்படுத்தலாம்.அதனால், உள்ளீட்டு வரிப் பயனை திரும்பப் பெறுவதற்கு தகுதியற்ற நிறுவனங்களின் தொகை மட்டுமே, ஐ.ஜி.எஸ்.டி., யில் சேகரமாகும்இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|