பதிவு செய்த நாள்
05 மே2019
23:42

தேசிய
பங்குச் சந்தை குறியீட்டு எண், ‘நிப்டி’யில், கடந்த வாரம், 130
புள்ளிகள் ஏற்ற, இறக்கங்களுடன் வர்த்தகம் நடைபெற்று
முடிவுற்றது.
கடந்த வாரமும், அதற்கு முந்தைய வாரமும், இலக்கை கடக்க
முடியாமல் நிப்டியில் வர்த்தகம் நடைபெற்றது என்பது
குறிப்பிடத்தக்கது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்,
‘சென்செக்ஸ்’ 700 புள்ளிகள் ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகம் ஆனது.
கடந்த வார ஆரம்பத்தில், இந்திய பங்குச் சந்தைகள், ஆசிய மற்றும்
ஐரோப்பிய சந்தைகளில் ஏற்பட்ட சரிவை ஒட்டியே வர்த்தகமாகி வந்தன.
அமெரிக்கா
மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெளியான தொழில் துறை வளர்ச்சி குறியீடு,
எதிர்பார்த்ததை விட குறைவாக வந்தது. இதையடுத்து, பொருளாதார
வளர்ச்சியில் மந்தமான சூழல் போக்கு நிலவுவதாக கருதியதால்,
பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகம் ஆகின.
முந்தைய
நிதியாண்டின் நான்காம் காலாண்டில், பணவீக்க விகிதம், 2.4 சதவீதமாக
இருந்தது. மேலும், நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு,
பணவீக்க விகிதம், 3.2 சதவீதமாக இருக்கும் என, கருதப்படுகிறது.
இதற்கு முன், 3.4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு
இருந்தது.
பொருளாதார வளர்ச்சி விகிதம் முந்தைய கணிப்பு ஆன, 7.4
சதவீதத்திலிருந்து குறைந்து, 7.2 சதவீதமாக இருக்கும் என்றும்
கணிக்கப்பட்டுள்ளது.தனியார் வானிலை ஆராய்ச்சி மையமான, ‘ஸ்கை
மேட்’ நடப்பாண்டில், 50 சதவீத சராசரி பருவ மழைக்கு வாய்ப்பு உள்ளதாக
தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை வரும் ஜூன், 1ல் துவங்க உள்ளது.
நாட்டில் உள்ள முன்னணி வாகன உற்பத்தியாளர்களின், கடந்த காலாண்டு
வர்த்தக விபரம் மற்றும் நிதி அறிக்கைகள் வெளியாகி உள்ளன. அதில்,
பெரும்பாலான பயணியர் வாகன தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை
சரிந்துள்ளது.
மேலும், கனரக வாகனங்களின் விற்பனையும்
சரிந்துள்ளது. இதனால், வாகனத்துறை சார்ந்த பங்குகள் சரிவை
சந்தித்தன. இந்த தரவுகளை வைத்து பார்க்கும் போது, நுகர்வோர்
வாங்கும் திறன் குறைந்துள்ளது என தெரிகிறது. நுகர்வோர் வாங்கும்
திறன் குறைவு, பணவீக்கம் அதிகரித்துள்ளது ஆகிய காரணங்களாலும்,
பங்குச் சந்தைகள் சரிந்து வர்த்தகம் ஆகின்றன.
அமெரிக்க பங்குச் சந்தை குறியீடான, ‘டவ் ஜோன்ஸ்’ அதன் வரலாற்று உச்சத்தை நோக்கி வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.அமெரிக்க
பொருளாதார காரணிகளில் முக்கியமான ஒன்று, வாரம் ஒரு முறை
வெளிவரும், விவசாயம் சாரா அரசு துறைகளில் புதிதாக வேலையில்
அமர்த்தப்பட்டவர் எண்ணிக்கை விபரம். இது, எதிர்பார்த்ததை விட
அதிகமாக இருந்தது.
அதாவது, மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது,
ஏப்ரல் மாதத்தில் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக, பொருளாதார
வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும் என்று கருதப்படுகிறது. இதன்
தொடர்ச்சியாக நாணய குறியீடான, டாலர் இண்டெக்ஸின் மதிப்பு உயரும்
என்பதால், அது சந்தையின் சாதகமான போக்கிற்கு வழிவகுத்தது.இந்த வாரத்தை பொறுத்தவரை, நிப்டி சப்போர்ட், 11660 மற்றும் 11600; ரெசிஸ்டென்ஸ் 11780.
முருகேஷ் குமார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|