உங்­கள் வீண் ­செ­ல­வு­களை முத­லீ­டாக மாற்­று­வது எப்­படி?உங்­கள் வீண் ­செ­ல­வு­களை முத­லீ­டாக மாற்­று­வது எப்­படி? ...  ஜி.டி.பி.,யில் குளறுபடியா? ஜி.டி.பி.,யில் குளறுபடியா? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘டெப்ட் பண்ட்’ முத­லீட்­டா­ளர்­கள் என்ன செய்ய வேண்­டும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2019
23:55

மியூச்சுவல் பண்ட்களில், ‘டெப்ட் பண்ட்’ வகை நிதிகள் தொடர்பான மோசமான செய்திகள், முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.


முத­லீட்­டா­ளர்­கள் மத்­தி­யில் மியூச்­சு­வல் பண்ட்­கள் தொடர்­பான விழிப்­பு­ணர்வு, அண்­மைக்­கா­ல­மாக அதி­க­ரித்து வரு­கிறது.மியூச்­சு­வல் பண்ட் திட்­டங்­களில் செய்­யப்­படும் முத­லீ­டு­கள் அதி­க­ரித்து வரு­வது தொடர்­பா­க­வும், புள்­ளி­வி­ப­ரங்­கள் வெளி­யாக வந்த நிலை­யில், ‘டெப்ட் பண்ட்’ எனப்­படும் கடன்­சார் நிதி­கள் பிரச்­னை தொடர்­பான செய்­தி­கள், முத­லீட்­டா­ளர்­கள்
மத்­தி­யில் குழப்­பத்­தை­யும், கவ­லை­யை­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.டெப்ட் பண்ட்­கள் தொடர்ந்து சிக்­க­லுக்கு உள்­ளா­வது, இப்­போது என்ன செய்­வது? என்ற, கேள்­வியை எழுப்­பி­யுள்­ளது.பல முத­லீட்­டா­ளர்­கள் பதற்­றம் அ­டைந்து, முத­லீட்­டில் இருந்து வெளி­யே­று­வது சரி­யாக இருக்­குமா என, ஆலோ­சனை கேட்­ப­தாக மியூச்­சு­வல் பண்ட் ஆலோ­ச­கர்­கள் தெரி­விக்­கின்­ற­னர். டெப்ட் பண்ட் பிரி­வில் சிக்­கல் ஏற்­பட்­டுள்­ளது உண்மை தான் என்­கின்­ற­னர்.ஐ.எல்., அண்டு எல்.எஸ்., நிதி நிறு­வன பிரச்­னை­யில் இருந்து இது துவங்­கி­யது. இந்­நி­று­வ­னத்­து­டன் தொடர்பு கொண்ட டெப்ட் பண்ட்­கள் முத­லில் சிக்­க­லுக்­குள்­ளா­யின. தொடர்ந்து டி.எச்.எப்.எல்., ஜீ குழும பிரச்னை உள்­ளிட்­டவை மேலும் பாதித்­தன. இப்­போது யெஸ் பாங்­கும் இந்த ரேட்­டிங் குறைக்­கப்­பட வாய்ப்­பி­ருப்­பது மற்­றும் பணம் கிடைப்­பது தள்­ளிப்­போ­க­வும் வாய்ப்­பி­ருப்­ப­தாக சொல்­லப்­ப­டு­வது, முத­லீட்­டா­ளர்­களை கவ­லை­யில் ஆழ்த்­தி­யுள்­ளது.முத­லீட்­டா­ளர்­க­ளின் பதற்­றம் இயற்­கை­யா­னது தான் என்­றா­லும், முத­லில் அவர்­கள் தங்­கள் முத­லீ­டு­க­ளின் நிலையை ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்­டும் என்­கின்­ற­னர். பிரச்­னைக்கு உள்­ளான நிறு­வ­னங்­களில், நிதி­க­ளின் முத­லீடு அளவை பார்க்க வேண்­டும் என்­கின்­ற­னர். இதன் அளவு மொத்த முத­லீட்­டில் குறை­வாக இருந்­தால், அதிக பிரச்னை இல்லை என கரு­த­லாம்.


பிரச்­ச­னைக்கு உள்­ளான நிறு­வ­னங்­களில் கணி­ச­மான முத­லீட்டை நிதி­கள் கொண்­டி­ருந்­தால், அதன் முத­லீட்­டா­ளர்­கள் தங்­கள் சூழ­லுக்கு ஏற்ப முடிவு செய்ய வேண்­டும். இது தொடர்­பாக தங்­கள் ஆலோ­ச­கர்­களு­டன் ஆலோ­சித்து, முத­லீட்டை தொடர்­வது பற்றி தீர்­மா­னிக்­க­லாம்.
இந்த சூழ­லில் நிதி ஆலோ­சகர்­கள் மற்­றொரு முக்­கிய விஷ­யத்­தை­யும் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.பெரும்­பா­லான முத­லீட்­டா­ளர்­கள் டெப்ட் பண்ட்­கள் ரிஸ்கே இல்­லா­தவை என கரு­தி­ய­தா­க­வும், அத­னால் இப்­போ­தைய பிரச்­­னை­களால் அதிர்ச்சி அடைந்­தி­ருக்­கின்­ற­னர். ரிஸ்க் பற்றி அறிந்­த­வர்­கள் கூட, அதை பெரி­தாக எடுத்­துக்­கொள்­ள­வில்லை.உண்­மை­யில், டெப்ட் பண்ட்­கள் ரிஸ்க் குறைந்­த­வையே தவிர, ரிஸ்கே இல்­லா­தவை அல்ல. வட்டி விகித ரிஸ்க், கிரெ­டிட் ரிஸ்க் என அவற்­றில் பல­வித ரிஸ்க் உண்டு. கடன்­சார் நிதி­களை ரிஸ்கே இல்­லா­தவை
என நினைத்­த­வர்­கள் தான் அதிக அதிர்ச்­சி அடைந்­துள்­ள­னர்.


இந்த உண்­மையை இப்­போது சந்தை யதார்த்­தம் உணர்த்­தி­யுள்­ளது. எனவே பீதி அடை­யா­மல்
முத­லீட்டை ஆராய்ந்து பார்த்து முடிவு எடுப்­பதே பொருத்­த­மாக இருக்­கும். முத­லீட்­டா­ளர்­கள்
தாங்­கள் தேர்வு செய்­துள்ள நிதி­கள் மற்­றும் அவற்­றின் நிலை குறித்து, ஆய்வு செய்ய
வேண்­டும்.அச்­சத்­தின் அடிப்­ப­டை­யில் மட்­டுமே முடி­வெ­டுக்­கா­மல், அனைத்து அம்­சங்­க­ளை­யும்கவ­ன­மாக பரி­சி­லித்தே முத­லீட்டை தொடர்­வதா? வெளி­யே­று­வதா? என தீர்­மா­னிக்க வேண்­டும்.புதிய முத­லீட்­டா­ளர்­களை பொருத்­த­வரை, மியூச்­சு­வல் பண்ட் தொடர்­பான பல்­வேறு வகை ரிஸ்க் அம்­சங்­களை புரிந்து கொண்டு, தங்கள் நிதி இலக்­கு­கள், முத­லீட்டு உத்­தி­க­ளுக்கு ஏற்ப முடிவு எடுக்க, இந்த சூழல் ஏற்­ற­தாக இருக்­கும்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)