ரிலையன்ஸ் பதிவு அலுவலகங்கள் குஜராத்திற்கு மாற்றம்ரிலையன்ஸ் பதிவு அலுவலகங்கள் குஜராத்திற்கு மாற்றம் ... ஐ.டி.சி., தலைவரானார் சஞ்சய் பூரி ஐ.டி.சி., தலைவரானார் சஞ்சய் பூரி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பயணியர் வாகன விற்பனை சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2019
00:59

புதுடில்லி:நாட்டில், பயணியர் வாகன விற்பனை, ஏப்ரல் மாதத்தில், 17.07 சதவீதம் அளவுக்கு குறைந்திருப்பதாக, இந்திய வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான, ‘சியாம்’ தெரிவித்துள்ளது.இது குறித்து, இக்கூட்டமைப்பு மேலும் தெரிவித்திருப்பதாவது:கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 2.98 லட்சம் பயணியர் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன.
ஆனால், நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 2.47 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.கார் விற்பனையை பொறுத்தவரை, ஏப்ரல் மாதத்தில், உள்நாட்டில், 1.60 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.இதுவே, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 2 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன, அதாவது நடப்பாண்டில், ஏப்ரல் மாதத்தில் கார் விற்பனை, 19.93 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
மோட்டார் சைக்கிள் விற்பனை, கடந்த மாதத்தில், 11.81 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 12.30 லட்சம் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டு ஏப்ரலில், 10.84 லட்சம் மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே விற்பனையாகின.மொத்த இருசக்கர வாகனங்களின் ஏப்ரல் மாத விற்பனை, 16.36 சதவீதம் சரிந்து, 16.38 லட்சமாக உள்ளது.
இதுவே, இதற்கு முந்தைய ஆண்டில், இதே மாதத்தில் விற்பனை, 19.58 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.வர்த்தக வாகனங்கள் விற்பனை, 5.98 சதவீதம் அளவுக்கு சரிந்து, 68 ஆயிரத்து, 680 வாகனங்கள் விற்பனையாகின.இவ்வாறு, சியாம் அமைப்பு தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)