பதிவு செய்த நாள்
30 மே2019
06:25

புதுடில்லி : ‘வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டியை, ரிசர்வ் வங்கி மீண்டும் குறைக்கும்’ என, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, இந்தாண்டு, இரு முறை கூடியது. அப்போது, ரெப்போ வட்டி, தலா, 0.25 சதவீதம் என, இரு முறை குறைக்கப்பட்டது.தற்போது, ரிசர்வ் வங்கியிடம் இருந்து, வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான வட்டி, 6 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், ஜூன், 3, 4 மற்றும் 6ல் நடைபெறும், ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், ரெப்போ வட்டி, மேலும் குறைக்கப்படும் என, அமெரிக்காவைச் சேர்ந்த, வர்த்தக ஆய்வு நிறுவனமான, டி அண்டு பி., தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:அமெரிக்காவின் வரி உயர்வால், உலகளவில் வர்த்தகப் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் தாக்கம், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் எதிரொலிக்கும்.இந்தியாவில், பருவ மழை பொழிவு, உணவுப் பொருட்கள், கச்சா எண்ணெய் ஆகியவற்றின் விலையேற்றத்தால், பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால், கொள்கை முடிவெடுப்பதில், ரிசர்வ் வங்கி பொறுத்திருந்து பார்க்கலாம் எனக் கருதுகிறது.ஆனால், தொழில் துறையின் மந்தமான போக்கும், ஸ்திரமற்ற வர்த்தகச் சூழலும், மீண்டும் முதலீடு பெருகுவதை தாமதப்படுத்தும் என்பதால், ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டியை குறைக்கும் எனத் தெரிகிறது.
ஜி.எஸ்.டி., மற்றும் பண மதிப்பிழப்பின் தாக்கம் மறைந்து, பல துறைகள் தற்போது தான், மெதுவான முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளன. எனினும், முதலீடு களில் சுணக்கமும், தேவைப்பாடு குறைந்துள்ளதும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து உள்ளதை காட்டுகின்றன.இந்தாண்டு மார்ச்சை விட, ஏப்ரலில், தொழில் துறை உற்பத்தி சற்று அதிகரித்திருக்கக் கூடும். அதன் அடிப்படையில், இத்துறை, 2 – 3 சதவீத வளர்ச்சி கண்டிருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய சூழலில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, அடுத்த மாதம், மூன்றாவது முறையாக, ரெப்போ வட்டியை குறைக்கக் கூடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|