பதிவு செய்த நாள்
05 ஜூன்2019
23:26

வாஷிங்டன்:நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம், அடுத்த மூன்று ஆண்டுகளில், 7.5 சதவீதமாக இருக்கும் என, உலக வங்கி அறிவித்துள்ளது.
தனியார் நுகர்வு, முதலீடுகள் ஆகியவை அதிகரிப்பதன் காரணமாக, இந்த வளர்ச்சியை அடையும் எனவும் தெரிவித்துள்ளது.சர்வதேச பொருளாதார வாய்ப்புகள் குறித்த ஆய்வறிக்கையை, நேற்று, உலக வங்கி வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவின் வளர்ச்சி, மார்ச், 31ம் தேதியுடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டில், 7.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. அரசின் உள்கட்டுமானத் துறையில் செய்த முதலீடுகள் காரணமாக மந்தநிலை சரிசெய்யப்பட்டுள்ளது.சீனாவை பொறுத்தவரை, 2018ல் வளர்ச்சி விகிதம், 6.6 சதவீதமாக இருந்தது. 2019ல், இதுவே, 6.2 சதவீதமாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2020ல், 6.1 சதவீதமாகவும், 2021ல், 6 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. சீனாவுடன் ஒப்பிடுகையில், இந்தியா, உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக தொடர்ந்து இருக்கும். 2020ல் சீனாவை விட, இந்தியாவின் வளர்ச்சி விகிதம், 1.5 சதவீதம் அதிகரித்து இருக்கும்.நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம், 7.5 சதவீதமாக இருக்கும். இது இதற்கு முந்தைய கணிப்பிலிருந்து மாறுபடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த வளர்ச்சி மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அப்படியே தொடரும்.தனியார் நுகர்வு மற்றும் முதலீடு, நாட்டின் கடன் வளர்ச்சியையும், உகந்த நிதி கொள்கையையும் வலுவாக்கி உள்ளது. நகர்ப்புற நுகர்வு, நாட்டின் கடன் வளர்ச்சிக்கு உதவுவதாக அமைந்திருந்தது. விவசாய பொருட்கள் விலை அதிகரிக்காததால், கிராமப்புற நுகர்வு குறைந்தது. பாகிஸ்தானின் வளர்ச்சி விகிதம், நடப்பு நிதியாண்டில், மேலும், 2.7 சதவீதம் சரிவினை சந்திக்கும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|