பதிவு செய்த நாள்
11 ஜூன்2019
03:16

புதுடில்லி:பாகிஸ்தானிலிருந்து, இந்தியா இறக்குமதி செய்வது, மார்ச் மாதத்தில், 92 சதவீதம் சரிந்துள்ளது.புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும், 200 சதவீதம் சுங்க வரி அதிகரிக்கப்பட்டது.
இதையடுத்து, மார்ச் மாதத்தில், இந்தியாவுக்கான இறக்குமதி, 92 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.பிப்ரவரி 16ல், புல்வாமா தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளை, இந்தியா எடுத்தது. பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தி, பழங்கள், சிமென்ட், பெட்ரோலியப் பொருட்கள் என, அனைத்து பொருட்களின் மீதும், 200 சதவீதம் சுங்க வரி அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், பாகிஸ்தானுக்கான ஏற்றுமதியும் மார்ச் மாதத்தில், 32 சதவீதம் அளவுக்கு குறைந்து விட்டது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|