பதிவு செய்த நாள்
11 ஜூன்2019
23:42

புதுடில்லி:உள்நாட்டில், பயணியர் வாகனங்கள் விற்பனை, கடந்த மே மாதத்தில்
கடுமையான சரிவை சந்தித்துள்ளது.
இது குறித்து, இந்திய வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான, ‘சியாம்’ கூறியுள்ளதாவது:
உள்நாட்டு
பயணியர் வாகன விற்பனை, கடந்த மே மாதத்தில், 20.55 சதவீதம் சரிவை
கண்டுள்ளது. 2018 மே மாதத்தில், 3.01 லட்சம் வாகனங்கள் விற்பனை
செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டு மே மாதத்தில், 2.39 லட்சம்
வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.
உள்நாட்டில் கார்
விற்பனையும், 26.03 சதவீதம் சரிவை கண்டுள்ளது. கடந்த, 2018 மே
மாதத்தில், 1.99 லட்சம் கார்கள் விற்பனை ஆகியிருந்தன. இந்த மே
மாதத்தில், 1.47 லட்சம் கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. மேலும்,
மோட்டார் சைக்கிள் விற்பனை, 6.73 சதவீதமும், வர்த்தக வாகனங்கள்,
10.02 சதவீதமும் சரிவை கண்டுள்ளன.இவ்வாறு சியாம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|