பதிவு செய்த நாள்
08 ஜூலை2019
17:04

மும்பை : பட்ஜெட் தாக்கம் இன்றைய வர்த்தகவாரத்தின் முதல்நாள் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 793 புள்ளிகளும், நிப்டி 253 புள்ளிகளும் சரிவை சந்தித்தன.
மத்திய பட்ஜெட் கடந்த வெள்ளியன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், ஒரு சில அறிவிப்புகள் சிலருக்கு அதிருப்தியை தந்துள்ளது. குறிப்பாக உயர் பணக்காரர்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டு இருப்பது, பொதுத்துறை நிறுவன பங்குகள் 35 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருப்பது, தங்கம் மீதான இறக்குமதி வரி மற்றும் பெட்ரோல் - டீசலுக்கான வரி அதிகரிப்பு போன்ற காரணங்கள் பங்குச்சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
கடந்த வெள்ளியன்றே பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்த நிலையில் இன்றைய வர்த்தகவாரத்தின் முதல்நாளில் பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கின. தொடர்ந்து மேற்சொன்ன காரணங்கள் பங்குச்சந்தைகளில் எதிரொலித்ததால் முதலீட்டாளர்கள் அது தொடர்பான பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தன. இதனால் இன்றைய வர்த்தகம் சரிவை சந்தித்தன. மேலும், ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவும் இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஜூலை 8) சரிய முக்கியமா காரணமாக அமைந்தன. ஒருகட்டத்தில் சென்செக்ஸ் 903 புள்ளிகள் அளவுக்கு சரிந்தன. இறுதியில் வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 792.72 புள்ளிகள் சரிந்து 38,720.57ஆகவும், நிப்டி 252.55 புள்ளிகள் சரிந்து 11,558.60ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் பஜாஜ் பைனான்ஸ், ஓஎன்ஜிசி., என்டிபிசி, ஹீரோ மோட்டோ கார்ப், மாருதி போன்ற நிறுவன பங்குகள் அதிக சரிவை சந்தித்தன. இவைகள் தவிர்த்து யெஸ் வங்கி, ஹெச்சிஎல் டெக்., டிசிஎஸ்., போன்ற நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன.
ரூ.5 லட்சம் கோடி இழப்பு
பட்ஜெட்டிற்கு முதல்நாள் அதாவது, ஜூலை 4ம் தேதி, மும்பை பங்குச்சந்தைகளில் 153.58 லட்சம் கோடியாக இருந்த முதலீடு, ஜூலை 8ம் தேதி ரூ.148.08 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இதன் மூலம் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|