பதிவு செய்த நாள்
16 ஜூலை2019
11:07

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் இரண்டாம் நாளில் உயர்வுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 104.83 புள்ளிகள் உயர்ந்து 39,001.54ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 29.25 புள்ளிகள் உயர்ந்து 11,617.60ஆகவும் வர்த்தகமாகின.
எஸ்பிஐ., ஆக்சிஸ், ஐசிஐசிஐ., போன்ற வங்கி சார்ந்த பங்குகள், என்டிபிசி போன்ற நிறுவன பங்குகள் உயர்வுடன் இருந்ததால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு சரிவு
பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்த போதும் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.68.59ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|