பதிவு செய்த நாள்
30 ஜூலை2019
06:56
புதுடில்லி: ‘வோடபோன் ஐடியா’ நிறுவனப் பங்குகள் விலை, நேற்று, 27 சதவீதம் சரிந்தது. இதையடுத்து, ஒரே நாளில், நிறுவனத்தின் சந்தை மதிப்பில், 7 ஆயிரத்து 126 கோடி ரூபாய் குறைந்தது.
முதல் காலாண்டில், வருவாய் மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து, இந்த சரிவு நேர்ந்தது.நேற்று மும்பை பங்குச் சந்தையில், இந்நிறுவனப் பங்கு, 26.81 சதவீதம் சரிந்து, ஒரு பங்கின் விலை, 6.77 ரூபாய் ஆக குறைந்தது.வர்த்தகத்தின் இடையே, 52 வார குறைவான விலையான, 6.56 ரூபாயைத் தொட்டது.
தேசிய பங்குச் சந்தையில், 27 சதவீதம் சரிவு அடைந்து, ஒரு பங்கின் விலை, 6.75 ரூபாய் ஆனது.பங்குகளின் விலை சரிவு, அதிக விற்பனை காரணமாக, நிறுவனத்தின் சந்தை மதிப்பில், 7 ஆயிரத்து, 126 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.வோடபோன் ஐடியா தவிர, கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ், ஆதித்ய பிர்லா கேப்பிட்டல், ஆதித்ய பிர்லா மணி, அல்ட்ராடெக் சிமென்ட் போன்ற நிறுவனப் பங்குகளும் கடும் சரிவைக் சந்தித்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|