புதிய தொழில் துவங்குதல்  தமிழகத்துக்கு 7வது இடம் புதிய தொழில் துவங்குதல் தமிழகத்துக்கு 7வது இடம் ...  தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி அதிகரிப்பு:ஜூலை மாதத்தில் 52.5 புள்ளிகளாக உயர்வு தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி அதிகரிப்பு:ஜூலை மாதத்தில் 52.5 புள்ளிகளாக ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஜூலை மாத விற்பனை: மாருதி 33 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2019
23:51

புதுடில்லி:மாருதி சுசூகி நிறுவனத்தின், ஜூலை மாத விற்பனை, 33 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.




நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்புநிறுவனமான, மாருதி சுசூகி, ஜூலை மாதத்தில், மொத்தம், 1 லட்சத்து, 9 ஆயிரத்து, 264 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு, ஜூலை மாதத்தில், மொத்தம், 1 லட்சத்து, 64 ஆயிரத்து, 369 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இதையடுத்து, மொத்த விற்பனையில், 33 சதவீத சரிவைக் கண்டுள்ளது.




உள்நாட்டு விற்பனையைப் பொருத்தவரை, 36.3 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டில், மொத்தம், 98 ஆயிரத்து, 210 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. இதுவே, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 1 லட்சத்து, 54 ஆயிரத்து, 150 வாகனங்கள் விற்பனை ஆகியிருந்தன.சிறிய ரக கார்களான, ஆல்ட்டோ, வேகன் ஆர் ஆகிய வாகனங்களின் விற்பனை, 69.3 சதவீதம் சரிவு கண்டுள்ளது.



காம்பாக்ட் ரக கார்கள் பிரிவில் செலிரியோ, சுவிப்ட், பலேனோ, டிசையர் உள்ளிட்ட கார்கள் விற்பனையில், 22.7 சதவீதமும், பன்முக பயன்பாட்டு வாகனங்கள் பிரிவு விற்பனையில், 38.1 சதவீதமும் சரிவு ஏற்பட்டுள்ளது.ஏற்றுமதியும் 9.4 சதவீதம் சரிவு கண்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில், 9 ஆயிரத்து, 258 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில், 10 ஆயிரத்து, 219வாகனங்கள் ஏற்றுமதி ஆகியிருந்தன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)