பதிவு செய்த நாள்
26 செப்2019
06:11

புதுடில்லி : ‘‘பொருளாதார வளர்ச்சியை, 8 முதல், 9 சதவீதம் வரை அதிகரித்து, அதை தக்க வைப்பதே, நாட்டின் முன் இப்போது இருக்கும் சவாலாகும்,’’ என, ‘நிடி ஆயோக்’கின் தலைமை செயல் அதிகாரி, அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
சுரங்கவியல், புவியியல் மற்றும் உலோகவியல் ஆய்வு நிறுவனமான, எம்.ஜி.எம்.ஐ., ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, அமிதாப் காந்த் பேசியதாவது.பொருளாதார வளர்ச்சியை, 8 முதல், 9 சதவீதம் வரை அதிகரிப்பதில், அரசு உறுதியாக உள்ளது.இருப்பினும், அந்த வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்வதே, உண்மையான சவால். நாட்டின் வளர்ச்சியை, முன்பு இருந்த நிலைக்கு எடுத்துச் செல்ல, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அத்துடன் நிற்காமல், ஆண்டுக்கு ஆண்டு, 8 முதல், 9 சதவீதம் வளர்ச்சியை, அடுத்த, 30 ஆண்டுகளுக்கு அல்லது அதற்கும் கூடுதலான ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக எடுத்துச் செல்ல வேண்டும்.விவாதம்அதற்கு, பொருளாதார வளர்ச்சியின் மையமாக, எரிசக்தி துறை இருக்க வேண்டும்.எரிசக்தி ஆற்றலில் கவனம் செலுத்தி, அதை திறம்பட நிர்வகிக்கா விட்டால், உலகில் எந்த நாடும் நீண்ட காலமாக வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது.
நம் நாட்டின் ஒரு நபருக்கான எரிசக்தி நுகர்வு, உலக சராசரியில், மூன்றில் ஒரு பங்கு மட்டுமே.நம் நாடு, வளர்ந்த நாடாக தொடர்ந்து இருக்க வேண்டு மானால், அதன் தனிநபர் எரிசக்தி ஆற்றல் நுகர்வு, பல மடங்கு அதிகரிக்க வேண்டும்.நாம் ஒப்பீட்டளவில் எரிசக்தி திறன் மிக்க பொருளாதாரமாக இருந்தாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 1 யூனிட்டுக்கான எரிசக்தி தேவை, உலக சராசரியை விட, மிகவும் குறைவாகவே உள்ளது.
இதை, மேலும் அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுக்க இருக்கிறோம்.கடந்த, 2017 – -18ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில், நம் வளர்ச்சி, 8.1 சதவீதமாக இருந்தது. இந்த வளர்ச்சியானது, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 5 சதவீதமாக குறைந்து போனது.இது, பொருளாதார சுழற்சியில் ஏற்படும் வீழ்ச்சியா, இல்லையா என்பது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இத்தகைய விவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், பொருளாதார வளர்ச்சிக்கு அரசு உறுதியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வரி குறைப்பு - ரிசர்வ் வங்கி, வட்டி குறைப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதுவரை, 1.10 சதவீதம் அளவுக்கு, வட்டி குறைப்பை செய்து உள்ளது.பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை, நிதியமைச்சரும் எடுத்து வருகிறார்; தொடர்ந்து, பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறார்.ஆறு ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வளர்ச்சியையும், 45 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பின்மையையும் சரி செய்யும் வகையில், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.கடந்த, 28 ஆண்டுகளில் இல்லாத வகையில், கார்ப்பரேட் வரி, 10 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அமிதாப் காந்த் பேசினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|