300 ஏர்பஸ் விமானங்கள் ‘இண்டிகோ’ வாங்குகிறது 300 ஏர்பஸ் விமானங்கள் ‘இண்டிகோ’ வாங்குகிறது ...  மீண்டும் சாதனை படைத்தது சென்செக்ஸ் மீண்டும் சாதனை படைத்தது சென்செக்ஸ் ...
தங்க பொது மன்னிப்பு திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2019
03:31

புதுடில்லி: கணக்கில் காட்டாமல், வீடு மற்றும் நிறுவனங்களில் வைத்திருக்கும் தங்கத்தை வெளியே கொண்டு வருவதற்கு உதவும் வகையில், ‘தங்க பொது மன்னிப்பு திட்டம்’ ஒன்றை கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கி உள்ளதாக செய்திகள் வருகின்றன.

தற்போது ஆண்டுக்கு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்கள், வருமான வரி அறிக்கையில், தங்களிடமுள்ள தங்கத்தையும் தெரிவிக்க வேண்டும். இருப்பினும், கணக்கில் காட்டப்படாத தங்கம் மக்களிடம் ஏராளமாக உள்ளது.புதிய முயற்சிஇப்படிப்பட்ட தங்கத்தை வெளியே கொண்டு வரும் வகையில், 2015- – 16ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், ஜி.எம்.எஸ்., எனும் தங்க நாணயமாக்கல் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது.

இருப்பினும், 2017ம் ஆண்டு ஆகஸ்ட் நிலவரப்படி, வங்கிகள் மொத்தம், 11.1 டன் தங்கத்தை மட்டுமே சேகரித்தது. மக்களிடம் இருப்பதாக மதிப்பிடப்பட்ட அளவுடன் ஒப்பிடுகையில், இது மிகவும் குறைவாகும். தங்கத்தை வெளியே கொண்டு வரும் முயற்சிக்கான இந்த திட்டம் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், அடுத்த கட்டமாக, புதிய முயற்சி மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.இது குறித்து, அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:உயர் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக செய்யப்படும், இரண்டாவது பெரிய முயற்சியாக இது இருக்கும்.ஒரு நபர் அதிகளவிலான தங்கத்தை, ரசீதுகள் இன்றி வைத்திருந்தால், அதன் முழு மதிப்பில், 30 சதவீதத்திற்கு வரி செலுத்த வேண்டியதிருக்கும். கல்வி வரியுடன் சேர்த்து, 33 சதவீதமாக அது இருக்கலாம். இன்னும் எவ்வளவு வரிவிகிதம் என்பது முடிவாகவில்லை.கறுப்பு பணம்இதற்காக, தங்க வாரியம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. அதில் அரசு மற்றும் தனியார் துறைகளின் பிரதிநிதிகள், உறுப்பினர்களாக பங்கெடுப்பார்கள்.பிரதமர் அலுவலகம், நிதியமைச்சகத்துடன் கலந்தாலோசித்து, விரைவில் இந்த திட்டத்தை இறுதி செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.திருமணமான பெண்களைப் பொறுத்தவரை, அவர்களிடம் உள்ள தங்க நகைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு வரை இந்த திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும்.மேலும், இந்த பொது மன்னிப்பு திட்டத்தின் படி அபராதம் மற்றும் வட்டி செலுத்துவதில், தனிநபர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், வருமான வரி துறையினர் இந்த திட்டம், பெரிய அளவில் கைகொடுக்காது என, கருதுகின்றனர்.

இது குறித்து, வருமான வரி துறை தரப்பில் பேசிய ஒருவர் கூறியதாவது: உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, பலர் தங்களது கறுப்பு பணத்தை தங்கமாக மாற்றினர்.அவர்கள், இப்போது தங்களிடம் இருக்கும் தங்கத்தை கணக்கில் கொண்டு வருவதற்கு, இந்த திட்டம் உதவி செய்வதாக அமைந்துவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.மேலும் சில தரப்பினர், இந்த திட்டம் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்கிறார்கள்.வதந்திகள்உலக தங்க கவுன்சிலின் இந்திய பிரிவின் நிர்வாக இயக்குனர் பி.ஆர்.சோமசுந்தரம் கூறியதாவது:இத்தகைய வதந்திகள் கடந்த சில காலமாக பரவி வருகின்றன. புழக்கத்தில் இல்லாத தங்கம் குறித்தோ, தனிநபர்கள் வைத்திருக்கும் தங்கம் குறித்தோ அரசாங்கத்திடம் எந்தக் கணக்கும் இல்லை.எனவே, கணக்கிடப்படாத தங்கத்திற்கான பொது மன்னிப்பு திட்டத்தை, அரசாங்கத்தால் கொண்டு வர முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, அரசிடம் இது போன்ற எந்த திட்டமும் இல்லை என்றும், பட்ஜெட் நெருங்கும் வேளையில், இது போன்ற செய்திகள் வருவது வாடிக்கையான ஒன்று தான் என்றும் தகவல்கள் வருகின்றன.

24 ஆயிரம் டன்நாடு முழுவதும் உள்ள குடும்பங்கள் மற்றும் மத அமைப்புகளில் சுமார், 23 ஆயிரம் முதல், 24 ஆயிரம் டன் தங்கம் பயன்படுத்தப்படாமல் இருப்பில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய குடும்பங்களின் சேமிப்பில் சுமார், 11 சதவீதம் தங்கத்தில் இருப்பதாக, பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.மேலும் ஓராண்டுக்கு சராசரியாக, 900 டன் தங்கம் நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)