பதிவு செய்த நாள்
10 நவ2019
23:56

இந்திய பங்குச்
சந்தைகள், கடந்த வாரம் உயர்ந்து வர்த்தகம் ஆகின. இதில் குறிப்பாக,
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், மீண்டும் ஒரு
முறை, வரலாற்று உச்சத்தை இரண்டாவது தடவையாக எட்டியது.
இருப்பினும்,
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி, 12 ஆயிரம் புள்ளிகள்
என்ற அளவை கடக்க இயலாமல், வார இறுதியில், சிறிய சரிவுடன்
வியாபாரம் முடிவுற்றது.
கடந்த சில வாரங்களாகவே, பங்குச் சந்தைகள் உயர்ந்து காணப்பட்டன.நடப்பு
நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், நிறுவனங்களின் நிதி
அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதில், குறிப்பிட்ட சில
நிறுவனங்களின் அறிக்கைகள், எதிர்பார்ப்புக்கு மேலாக இருந்ததன்
காரணமாக, அந்நிறுவன பங்குகள் விலை உயர ஆரம்பித்தது. இது,
சந்தையில் சாதகமான போக்குக்கு வழி வகுத்தது.
மேலும், சர்வதேச
சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங் களும், நம் சந்தையில்
பிரதிபலித்தன. உலகில் உள்ள முன்னணி நாடுகளின் பெரும்பாலான
பங்குச் சந்தை குறியீட்டு எண்கள், அதன் வரலாற்று உச்சத்தை அடைந்து
வருவது குறிப்பிடத்தக்கது.மேலும், அமெரிக்காவும், சீனாவும்
வர்த்தக மோதலை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இதை தொடர்ந்து, முன்பு விதிக்கப்பட்ட இறக்குமதி வரிகள் படிப்படியாக
விலக்கிக் கொள்ளப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனால், பொருளாதார வளர்ச்சி மீண்டும்
அதிகரிக்கும் எனகருதப்படுகிறது.
இத்தகைய
காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்து வருகின்றன.
இருப்பினும், இந்திய பங்குச் சந்தைகளின் உயர்வு, வார இறுதியில்
கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
உலகின் முன்னணி கருத்துக்கணிப்பு
நிறுவனமான மூடிஸ், இந்தியாவின் முதலீட்டு தகுதி நிலையை குறைத்து
அறிவித்தது. இதன் காரணமாக, வெள்ளியன்று பங்குச் சந்தைகள்
சரிவைக்
கண்டன.
கடந்த வாரத்தில், ரியல் எஸ்டேட், நிதித் துறை மற்றும்
தனியார் வங்கி துறை பங்குகள் உயர்ந்தும், ஊடகத் துறை, பொதுத் துறை
வங்கிகள், வாகனத் துறை, மருத்துவத் துறை, தொழில்நுட்பத் துறை போன்ற
துறைகளின் பங்குகள், சரிவுடனும் வர்த்தகம் ஆகின.இந்த
வாரத்தைப் பொருத்தவரை, நிப்டி அதன் ரெசிஸ்டென்ஸ் 12,035. இதை கடக்க
இயலாத
நிலையில், மேலும் சரிந்து வர்த்தகம் ஆக வாய்ப்புள்ளது.
ரெசிஸ்டென்ஸ் 12,035 மற்றும் 12,180; சப்போர்ட் 11,835 மற்றும் 11,760.
முருகேஷ் குமார்
murukesh.kumar@choiceindia.com
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|