பதிவு செய்த நாள்
12 நவ2019
23:41

டோக்கியோ:சென்னையிலிருந்து, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு, கடலுக்கு அடியில், ‘கேபிள்’ அமைக்கும் திட்டம், 2020ம் ஆண்டில் முடிந்து விடும் என எதிர்பார்ப்பதாக, ஜப்பானைச் சேர்ந்த, ‘என்.இ.சி., கார்ப்பரேஷன்’ தெரிவித்துஉள்ளது.
இணையதளம் உள்ளிட்ட தகவல் தொடர்பு வசதிகளை ஏற்படுத்த, சென்னையிலிருந்து அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு, வங்கக் கடலுக்கு அடியில் கேபிள் அமைக்கும் திட்டம் தீட்டப்பட்டது.இதையடுத்து, இதற்கான, ‘ஆர்டர்’ பி.எஸ்.என்.எல்., மற்றும் ‘ஏ.இ.சி., டெக்னாலஜிஸ் இந்தியா’ நிறுவனம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது.தற்போது, கேபிள் தயாரிக்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவுற்றுள்ள நிலையில், கடலுக்கு அடியில் கேபிளை நிறுவுவது உள்ளிட்ட சில பணிகள் மட்டும் பாக்கி இருக்கின்றன.
சாட்டிலைட் மூலமான ஏற்பாடுகளை விட, கேபிள் மூலமாக இணைப்பு வழங்குவதில் செலவு குறைவாக இருக்கும்.மேலும், இது நீடித்து இருக்கும், வேகமாகவும் இருக்கும் என்பதால், கேபிள் பதிக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதனால், வேகமான இணையதள வசதி, மொபைல் வசதி, தரவுகள் பரிமாற்றம் என அனைத்தும் கிடைக்கும்.இப்பணிகள், 2020ம் ஆண்டில் முடிந்து விடும் என என்.இ.சி., தெரிவித்தாலும், திட்டத்துக்கு ஆகும் மொத்த செலவு குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|