பதிவு செய்த நாள்
20 நவ2019
07:06

புதுடில்லி : கடந்த அக்டோபரில், பயணியர் வாகன விற்பனை, பண்டிகை கால தேவையை ஒட்டி, 11 சதவீதம் அதிகரித்திருப்பதாக, வாகன முகவர்கள் கூட்டமைப்பான, ‘எப்.ஏ.டி.ஏ.,’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த அக்டோபர் மாதத்தில், பயணியர் வாகன விற்பனை, 11 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், பண்டிகை காலத்தை முன்னிட்டு தேவை அதிகரித்தது தான்.இதனால், அக்டோபரில் மொத்தம், 2.48 லட்சம் பயணியர் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. இதுவே, கடந்த ஆண்டு அக்டோபரில், 2.23 லட்சம் பயணியர் வாகனங்கள் விற்பனை ஆகி இருந்தன.
இருசக்கர வாகனங்களைப் பொறுத்தவரை அக்டோபரில், 5 சதவீதம் அதிகரித்து, 13.35 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. இதுவே கடந்த ஆண்டில், இதே மாதத்தில், 12.70 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை, 4 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், வர்த்தக வாகனங்கள் விற்பனை, 23 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில், 87 ஆயிரத்து, 618 வாகனங்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், கடந்த அக்டோபரில், 67 ஆயிரத்து, 60 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. பண்டிகை காலத்தை பொறுத்தவரை, நுகர்வோர் தேவை அதிகரித்துள்ளது. மேலும் வாகன விற்பனை வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|