பதிவு செய்த நாள்
22 நவ2019
01:58

புதுடில்லி: பொதுத்துறையைச் சேர்ந்த சில நிறுவனங்களில் அரசின் வசம் இருக்கும் பங்குகளை விற்பனை செய்யும் முடிவை, இந்திய வர்த்தக சபைகளின் கூட்டமைப்பான, ‘பிக்கி’ வரவேற்றுள்ளது.
இந்த முடிவு, நிறுவனங்களை வலுப்படுத்தவும், புதிய முதலீடுகளை ஈர்க்கவும் உதவும் என, பிக்கி தெரிவித்துள்ளது.மத்திய அரசு, ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய அமைச்சரவை குழு, கடந்த புதன் அன்று ஒப்புதல் அளித்துள்ளது.அரசின் இம்முடிவு குறித்து, பிக்கி அமைப்பின் தலைவர் சந்தீப் சோமெனி மேலும் தெரிவித்துள்ளதாவது:தொழில் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் பிரச்னைகளை தீர்ப்பதற்கும் அரசு எடுத்து வரும் சமீப கால நடவடிக்கைகள் ஊக்கமளிப்பதாக இருக்கின்றன.குறிப்பாக, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களின் பங்குகளை விற்பது என எடுத்த முடிவு பாராட்டத்தக்கது.
இம்முடிவு, நிறுவனங்களை மேலும் மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் தேவையான புதிய முதலீடுகள் கிடைக்க வழிவகுக்கும். மேலும், இந்நிறுவனங்களை சார்ந்த பிற தொழில்களும் ஏற்றமடைய வாய்ப்புகள் உருவாகும். சாலைகள் மற்றும்நெடுஞ்சாலை துறை இந்த நடவடிக்கை மூலம் மேலும் வலுப்பெறும்.சர்வதேச நிதிச் சேவை மையத்தில், நிதிச் சேவைகளை வழங்குபவர்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிட, ஒரு ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை அமைப்பை ஏற்படுத்துவதற்கான அரசின் முடிவும் வரவேற்கத் தகுந்தது.இந்த ஒற்றைச் சாளர வசதி, வணிகத்தை மேலும் எளிதாக்கும். மேலும், தொலைதொடர்பு துறையில் நிறுவனங்கள் கட்டணங்களை செலுத்துவதற்கான காலத்திற்கு அவகாசம் அளித்துள்ளதையும், பிக்கி வரவேற்கிறது.இந்த நடவடிக்கை, மிகுந்த இடர்ப்பாட்டில் இருந்த நிறுவனங்களுக்கு ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது. இந்த துறை லாபகரமாக இயங்குவதற்கான சூழலை உறுதி செய்ய வேண்டும்.
மொத்தத்தில் பொதுத்துறைகள் லாபகரமாக இயங்குவதை நோக்கி முதலடி வைத்திருக்கிறது அரசு.இறுதியாக, தொழில் துறை உறவுகள் குறியீட்டிற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதும் வரவேற்கத் தக்கது. இந்த நடவடிக்கை மூலம், நாட்டில் சீரான தொழிலாளர் விதிமுறைகளை அமல்படுத்துவதில்மேலும் முன்னேறி உள்ளோம்.அவை, நிறுவன அதிபர்கள், ஊழியர்களின் நலனை கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளன.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.ஒப்புதல்மத்திய அரசின் வசம் உள்ள, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின், 53.29 சதவீத பங்குகளை விற்பதற்கும் அதன் நிர்வாக கட்டுப்பாட்டை மாற்றுவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.ஷிப்பிங் கார்ப்பரேஷனில் உள்ள, 63.75 சதவீத பங்குகளை விற்பனை செய்யவும் அனுமதி.கன்டெய்னர் கார்ப்பரேஷனில் உள்ள, 30.9 சதவீத பங்குகளை விற்பனை செய்யவும் அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உச்சம் தொட்டன
பாரத் பெட்ரோலியம், ஷிப்பிங் கார்ப்பரேஷன், கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களில் உள்ள பங்குகளை விற்பனை செய்வதற்கு, மத்திய அமைச்சரவை குழு அனுமதிவழங்கியதை அடுத்து, நேற்று, அந்நிறுவனப்பங்குகளின் விலை, சந்தையில் வர்த்தகத்தின்இடையே, 52 வார உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|