துளி செய்திகள் துளி செய்திகள் ...  ஜி.எஸ்.டி., வசூல் இலக்கு மாதம் ரூ.1.1 லட்சம் கோடி ஜி.எஸ்.டி., வசூல் இலக்கு மாதம் ரூ.1.1 லட்சம் கோடி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
குறைந்த வட்டியுடன் கூடிய ஒரு பாதுகாப்பான முதலீட்டுத்தேர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2019
15:29

கடினமாக உழைப்பதன் மூலமாக மட்டுமே மக்கள் பணம் சேர்க்க முடியும் என்ற காலமெல்லாம் போய்விட்டது; விரைந்து ஓடக்கூடிய இன்றைய காலகட்டமானது, அவர்கள் புத்திசாலித்தனத்துடன் முதலீடு செய்து வளர்வதை விரும்புகிறது. முதலீடுகளை மேற்கொள்வது, செல்வத்தை உருவாக்குவதற்கான மிகவும் நம்பகமான வழிகளில் ஒன்றாக உள்ளது. வருமானவரிச்சட்டம் 1961 -க்குநன்றி, வரி-சேமிப்பு சலுகைகளை பெறுவதற்கும் கூட மக்களுக்கு வாய்ப்பளிக்கக்கூடிய, ஒருசில முதலீட்டு திட்டங்களும் உள்ளன. முதலீடுகளை பாதுகாப்பானவையாகவும், வரிசேமிப்பு அளிக்கக்கூடியவையாகவும் ஆக்குவதற்கான ஒரு முன்னெடுப்பு நடவடிக்கையாக, இந்திய அரசாங்கத்தின் ஒரு முன்னெடுப்பான - எடேல்வெய்ஸ் மியூச்சுவல் பண்ட் மூலம், பாரத்பாண்ட் ஈ.டி.எப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பானது, டிசம்பர்12 முதல் டிசம்பர் 20 வரை முதலீடு செய்யும் வசதியை வழங்குகிறது. இந்த சலுகை, 'இந்தியாவின் முதல் கார்ப்பரேட் பாண்ட் ஈ.டி.எப் (எக்ஸ்சேன்ஜ்-ட்ரேடெட்பண்ட்)' ஆக உள்ளது. இந்தஈ.டி.எப், இந்திய அரசின் முதலீடுகள் மற்றும் பொது சொத்துக்கள் நிர்வாகத்துறையின் (டிபாம்) மூலமாக முன்வைக்கப்பட்டுள்ளது.



பாரத் பாண்ட் ஈ.டி.எப் -ஐக்கொண்டு, முதலீட்டாளர்கள் இப்பொழுது பொதுத்துறை பாண்ட்களில் முதலீடு செய்யலாம். இது அறிமுகம் செய்யப்பட்ட உடனே, இந்த சலுகையானது 'பரஸ்பரநிதிகள், ஈ.டி.எப்-கள், மற்றும் பாண்ட்களின் சிறப்பம்சங்களின்' ஒருகலவை என வல்லுநர்களால் மிகவும் பாராட்டப்பட்டு, சந்தையில் கலக்கி கொண்டிருக்கிறது.


வரிச்சலுகை
இதுமட்டும் அல்லாமல், பாரத் பாண்ட் ஈ.டி.எப், ஒரு சிறப்பான வரிசேமிப்பு திட்டமாக, குறிப்பாக குறியீட்டு நன்மையின் காரணமாக அதிக வரிவரம்புக்குள் உள்ளவர்களுக்கு சிறப்பானதாக இருப்பதாகவும் புகழ்பெற்று கொண்டிருக்கிறது. கடன் பரஸ்பர நிதிகளுக்கு பொருந்துகின்ற அளவாக, குறியீட்டிற்கு பிறகு 20% என்ற அளவில் பாரத்பாண்ட் ஈ.டி.எப் -க்கு வரி விதிக்கப்படுகிறது. ஆகவே, ஒருநபர் 30% வரி வரம்புக்குள் வருபவராக இருந்தால், அவர் ஈ.டி.எப்ஐ மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வைத்திருந்தால், அதில் இருந்து கிடைக்கும் லாபத்துக்கு 20% மட்டுமே வரிவிதிக்கப்படும். நிதிகளின் கையிருப்பு காலத்துக்கேற்ப வரிவிகிதம் அதிகரிக்கிறது; இதனால் அதிக வருமானத்துக்கு வழிவகுக்கிறது. பாரத்பாண்ட் ஈ.டி.எப் மற்ற பாரம்பரிய முதலீட்டு தேர்வுகளைவிட சிறந்ததாக இருப்பதற்கான காரணங்களில் ஒன்றாக இந்த வரிச்சலுகை உள்ளது.

மேலும் என்ன உள்ளது?
ஒரு சிறப்பான முதலீட்டு தேர்வாக பாரத்பாண்ட் ஈ.டி.எப் வளர்ந்து கொண்டு வருவதற்கு காரணங்களான பிற நன்மைகளில் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது: இந்த ஈ.டி.எப், என்.எச்.ஏ.ஐ, ஆர்.ஈ.சி, மின்சார கட்டமைப்பு போன்ற ட்ரிபிள் ஏ மதிப்பீடுகள் கொண்ட பொதுத்துறை பாண்ட்களில் முதலீடு செய்கிறது.
குறைவான நிதி நிர்வாக செலவு: 10000 கோடிகள் வரையிலான முதலீட்டுக்கு 0.0005% என்ற செலவின விகிதத்தை கொண்டிருப்பதால், நாட்டிலுள்ள கடன் பரஸ்பர நிதிசேவையில் உள்ள மிகவும் மலிவான தேர்வுகளில் ஒன்றாக இதுஉள்ளது. எளிமையாக கூறுவதென்றால், ஒரு நபர் ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால், அந்த நிதிகளை நிர்வகிப்பதற்காக ஏ.எம்.சி அதிகபட்சமாக ரூ.1 கட்டணமாக விதிக்கும்.
கட்டுப்பாடுகள் இல்லை: முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை மூலமாக, எந்த நேரத்திலும் பங்குகளை வாங்க, அல்லது விற்பனை செய்ய முடியும். ஸ்திரத்தன்மை மற்றும் முன்கணிப்புத்தன்மை: ஈ.டி.எப் ஒரு நிலையான முதிர்வு அமைப்பை பின்பற்றுவதால், முதிர்வுகாலத்தை அதுஎட்டிய உடனே, முதலீட்டாளர்கள் நிலையான வருமானத்தை எதிர்பார்க்கவும், கணிக்கவும் செய்யலாம்.

வெளிப்படையான அணுகுமுறை: இந்த ஈ.டி.எப், போர்ட் போலியோ உட்கூறுகளை தினசரி வெளிப்படுத்துவதன் மூலம், முதலீட்டாளரின் பணம் எங்கு முதலீடு செய்யப்படுகிறது என்பது குறித்து ஒருதரவை அவர் வைத்து கொள்ள உதவுகிறது.

இவை அனைத்தையும் தவிர, பாரத் பாண்ட் ஈ.டி.எப், பொதுத்துறை பாண்ட்களில் முதலீடு செய்வதால், குறைவான மற்றும் நடுத்தர ரிஸ்க் ப்ரொபைலை கொண்டிருப்பவர்களுக்கு, முதலீடு செய்வதற்கான ஒரு சிறந்தவழியாக இது இருக்கிறது. டீமேட்கணக்கு இல்லாதவர்கள், ஏ.எம்.சி இணையதளத்தின் வழியாக பாரத்பாண்ட் ஈ.டி.எப் -இல்முதலீடு செய்யலாம்.

தேவைகளுக்கு பொருத்தமான விருப்பத்தேர்வுகள்
எடேல்வெய்ஸ் ஏ.எம்சி -யினால் நிர்வகிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட இந்த ஈ.டி.எப், கீழே பட்டியலிடப்பட்டுள்ளவாறு இரண்டு விருப்பத்தேர்வுகளில் வருகிறது:
குறுகியகால முதிர்வு: மூன்று-ஆண்டுகாலத்துடன், நிப் பிபாரத்பாண்ட் குறியீட்டெண்-ஏப்ரல்2023ஐ, பாரத்பாண்ட் ஈ.டி.எப் தொடர்கிறது. டிச.5, 2019 தேதியில் குறியீட்டெண்ணின் குறிப்பிடும் பலன் 6.69% ஆகஉள்ளது.
நீண்டகாலமுதிர்வு: பாரத்பாண்ட் ஈ.டி.எப் - ஏப்ரல் 2030, நிப்பி பாரத் பாண்ட் குறியீட்டெண்-ஏப்ரல் 2030 ஐத்தொடர்கிறது, மேலும் அது 10 வருடங்கள் போன்ற நீண்டகால முதலீடுகளுக்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளது. டிச.5, 2019 தேதியில் குறியீட்டெண்ணின் குறிப்பிடும் பலன் 7.58 % ஆக உள்ளது.

இந்த இரண்டு விருப்ப தேர்வுகளுமே குறியீட்டெண்ணின் பலன்களை கொண்டிருக்கின்றன. அதாவது, பணவீக்கத்துக்கு ஏற்ப மாறுதல்கள் செய்வதன் மூலமாக வரிவருமானங்களை குறைப்பதாகும். இதன் மூலம் பாரம்பரிய முதலீட்டு திட்டங்களை விட குறைவான வரிவிதிப்புகளில், ஈ.டி.எப் முதலீடுகளை முதலீட்டாளர்கள் பெறமுடிகிறது. இந்த சலுகையானது 20 டிசம்பர் வரை கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, ஒருவர் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை
https://www.bharatbond.in/?utm_source=Dinamalar&utm_medium=content&utm_campaign=New_NFO_Launch
 பார்வையிட்டு, அவருக்கு சிறப்பாக பொருந்த கூடியதை தேர்வு செய்யலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)