பதிவு செய்த நாள்
24 டிச2019
04:17

பெங்களூரு: புழக்கத்தில் உள்ள, ‘டெபிட் கார்டுகள்’ எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளது; இதனால், அதன் பயன்பாடும் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில், 100 கோடி பேர், பண அட்டைகளை வைத்திருந்தனர். அந்த எண்ணிக்கையில், கடந்த அக்டோபர் மாத கணக்கெடுப்புபடி, 15 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது; 84.3 கோடி பண அட்டைகள் தான் புழக்கத்தில் உள்ளன.
இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக, ‘மேக்னடிக் ஸ்டிரிப்’ எனப்படும் மின் காந்த பட்டை அடங்கிய பண அட்டைகளை முற்றிலுமாக ஒழித்து, ‘சிப்’ எனப்படும் கம்ப்யூட்டர் வில்லை அடிப்படையிலான பண அட்டைகளை மட்டுமே பயன்படுத்த, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.
அதனால், 15.5 கோடி அட்டைகள் மாயமாகி விட்டன.ஏனெனில், பெயரளவுக்கு வங்கிக் கணக்கை துவக்கி வைத்திருந்தோருக்கு கூட, பண அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன. ரிசர்வ் வங்கி கெடுபிடியால், அவர்களில், பெரும்பாலானோருக்கு, சிப் பண அட்டைகள் வழங்க, வங்கிகள் முன்வரவில்லை. இதனால், ஒட்டுமொத்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|