பதிவு செய்த நாள்
03 ஜன2020
23:32

புதுடில்லி:இரு சக்கர வாகனங்கள் விற்பனை, கடந்த ஆண்டில் கடைசி மாதமான டிசம்பரில் வீழ்ச்சியையே சந்தித்துள்ளது, புள்ளி விபரங்கள் மூலம் தெளிவாகிறது.
கடந்த, 2018 டிசம்பருடன் ஒப்பிடுகையில்,2019 டிசம்பரில்,11.39 சதவீதம் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இது, முந்தைய ஆண்டை விட, 11 லட்சம் வாகனங்கள் குறைவு. எந்தெந்த நிறுவனங்கள், எவ்வளவு விற்பனை என பார்ப்போம்.
கடந்த, 2018 டிசம்பரில், ஹீரோ மோட்டோகார்ப், 4,53,985 வாகனங்களை விற்பனைக்கு அனுப்பிய நிலையில், 2019ல், 4,24,845 வாகனங்களையே விற்பனை செய்துள்ளது. பஜாஜ் ஆட்டோ, 2018ல், 1,57,252 வாகனங்களை விற்பனை செய்த நிலையில், 2019ல், 1,24,125 வாகனங்களையே விற்று உள்ளது.
அதுபோல, டி.வி.எஸ்., மோட்டார், 2,09,906 வாகனங்களை, 2018ல் விற்பனை செய்தது. அதுவே, 2019ல், 1,57,244 வாகனங்களை மட்டுமே விற்றுள்ளது. ராயல் என்பீல்ட் நிறுவனம், 2018ல், 58,278 வாகனங்களை விற்றது; 2019ல், 50,416 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
ஆனால், சுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் மட்டும், 2018 டிசம்பரில், 43,874 வாகனங்களை விற்ற நிலையில், கடந்த ஆண்டில், 44,368 இரு சக்கர வாகனங்களை கூடுதலாக விற்றுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|