பதிவு செய்த நாள்
03 ஜன2020
23:36

புதுடில்லி:பொருளாதார மந்த நிலையால், பெரும்பாலான நுகர்வோர் பொருட்களின் விற்பனை மந்தமாகி வரும் நிலையில், மொபைல் போன் விற்பனை, நடப்பு, 2020ம் ஆண்டில், 14 சதவீதம் வளர்ச்சி அடையும் என, ‘டெக்ஆர்க்’ என்ற ஆய்வு நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
ஸ்மார்ட் போன்களின் மிகப் பெரிய சந்தையாக, சீன நாடு உள்ளது. அதற்கு அடுத்த இடத்தை இந்தியா பெற்றுள்ளது. கடந்த, 2019ல், இந்தியாவில், 14.5 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகின. அது, இந்த ஆண்டில், 14 சதவீதம் வளர்ச்சி அடையும் என, கணிக்கப்பட்டு உள்ளது.
1 கோடி ஸ்மார்ட் போன்கள்
இந்த ஆண்டில் விற்பனையாகும் ஸ்மார்ட் மொபைல் போன்கள் எண்ணிக்கை, 16.5 கோடியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, சதவீத கணக்கில்,13.8 சதவீத உயர்வாக இருக்கும். பழைய மொபைல் போன்களை துாக்கிப்போட்டு விட்டு, புதிய, அதிநவீன ஸ்மார்ட் போன்களை வாங்கும் மனப்போக்கு, மக்கள் மத்தியில் அதிகரித்து உள்ளதே இதற்கு காரணம்.
எனினும், விற்பனைக்காக கடைகளுக்கு, ஸ்மார்ட் போன்கள் அனுப்பி வைப்பது, இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. ஏனெனில், எதிர்பார்க்கப்படும் விற்பனை இலக்குக்கும் அதிகமான அளவில், ஸ்மார்ட் போன்கள், கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த, ௨019ம் ஆண்டின்இறுதியில், 70 லட்சம் முதல், ஒரு கோடி ஸ்மார்ட் போன்கள், கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.இதனால், உடனடியாக அதிக எண்ணிக்கையில், கடைகளுக்கு, ஸ்மார்ட் போன்களை அனுப்பி வைப்பது தேவையில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
எனினும், ‘பீச்சர் போன்’ எனப்படும், சாதாரண போன்களை வைத்திருப்போர், ஸ்மார்ட் போன்களுக்கு மாறுவது, எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் இல்லை.ஏனெனில், மிகப் பெரிய மொபைல் போன் நிறுவனங்களான, ‘சயோமி, சாம்சங், விவோ, ஒப்போ மற்றும் ரியல்மீ’ போன்றவை, விலை குறைந்த போன்களை தயாரிப்பதில் ஆர்வமாக இல்லை.
சாதாரண மொபைல் போன்களின் விலை, 3,000 ரூபாயிலிருந்து, 5,000 ரூபாய் வரை உள்ள நிலையில், இந்த நிறுவனங்கள், விலை குறைந்த மொபைல் போன்களை தயாரிப்பதில் ஆர்வமாக இல்லை.
டெக்ஆர்க் அறிக்கை
மாறாக, இந்த போன்களில் இருந்து, குறைந்தபட்சம், 60 சதவீதம் விலை அதிகம் உள்ள ஸ்மார்ட் போன்கள் உற்பத்தியில் இந்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.மொபைல் போன் விற்பனைக்கு தடைக்கல்லாக, கட்டணங்கள் உயர்வு அமைந்துள்ளது. கடந்த ஆண்டின் கடைசி சில மாதங்களில், 40 சதவீதம் அளவுக்கு, கட்டணங்களை மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இது, மொபைல் போன் விற்பனையையும் மறைமுகமாக பாதிக்கிறது.
கட்டணங்கள் அதிகரிப்பால், புதிய, அதிநவீன வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்களை வாங்க விரும்புவோர் கூட, சற்று விலை குறைந்த, வசதிகள் குறைந்த ஸ்மார்ட் போன்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அவர்கள், ‘செகண்ட் ஹேண்ட்’ போன்களை வாங்கவும் தேவை ஏற்படுகிறது.
மேலும், புதிதாக வரும் போன்களில், பெரிய அளவில் எந்த கூடுதல் அம்சங்களும் இல்லாததால், இரண்டாம் பயன்பாடு மொபைல் போன் விற்பனை, இரட்டை இலக்கங்களில் வளர்ச்சி அடையும் என்றும், டெக்ஆர்க் அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|