பதிவு செய்த நாள்
11 ஜன2020
00:04

புதுடில்லி:நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, 'இன்போசிஸ்' நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், நிகர லாபமாக, 4,466 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. இது, 23.7 சதவீதம் அதிகரிப்பாகும்.
இதற்கு முந்தைய நிதிஆண்டின் இதே காலாண்டில், இந்நிறுவனம், 3,610 கோடி ரூபாய் நிகர லாபத்தை ஈட்டியிருந்தது.நடப்பு நிதியாண்டில், டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், இந்நிறுவனத்தின் வருவாய், 7.9 சதவீதம் உயர்ந்து, 23 ஆயிரத்து, 92 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில், இதுவே, 21 ஆயிரத்து, 400 கோடி ரூபாயாக இருந்தது.சமீபத்தில், நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கைகளில் குளறுபடி இருப்பதாகவும், அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் உண்மை விளம்பிகள் என்ற பெயரில் சிலர் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது அத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்த சுதந்திரமான உள் விசாரணை முடிந்துவிட்டதாகவும், அதில், அத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|