பதிவு செய்த நாள்
21 ஜன2020
03:26

புதுடில்லி: அரசுக்கு சொந்தமான, ஐ.டி.ஐ., நிறுவனம், தொடர் பங்கு வெளியீட்டுக்கு, 24ம் தேதியன்று வருகிறது.
இந்நிறுவனம், தொடர் பங்கு வெளியீட்டின் மூலம், 1,600 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக, 18 கோடி பங்குகளை, இந்நிறுவனம் விற்பனை செய்ய இருக்கிறது. மேலும், அதன் ஊழியர்களுக்காக, 18 லட்சம் பங்குகளை ஒதுக்கி உள்ளது. இந்த பங்கு வெளியீடு, இம்மாதம், 24ம் தேதி துவங்கி, 28ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த பங்கு வெளியீட்டில், ஒரு பங்கின் விலை எவ்வளவு என்பது குறித்து, 22ம் தேதியன்று அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்நிறுவனம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில், தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்கி வருகிறது. இதன் வாடிக்கையாளர்களாக, மாநில அரசுகள், ராணுவம், பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்., உள்ளிட்டவை இருக்கின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|