பதிவு செய்த நாள்
21 ஜன2020
03:29

புதுடில்லி: பிரபல இந்தி நடிகை திஷா பதானி, சமையற் கலைஞர் சஞ்சீவ் கபூர் ஆகியோர், வாஷிங்டன் ஆப்பிளுக்கான விளம்பர துாதர்களாக நியமிக்கப்பட்டுஉள்ளனர்.
இந்தியா, அமெரிக்க ஆப்பிளுக்காக, தனது சந்தையை, கடந்த, 2001ம் ஆண்டில் திறந்தது. அந்த சமயத்தில், மொத்தம் நான்கு கண்டெய்னர் ஆப்பிள்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.தற்போது, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள் சந்தையில், 16 சதவீதத்தை, அமெரிக்க ஆப்பிள்கள் கைப்பற்றி உள்ளன.இது குறித்து, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத்ஐ. ஜஸ்டர் கூறியதாவது:அமெரிக்காவிலிருந்து, ஆப்பிள் ஏற்றுமதி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில், உள்நாட்டு வினியோகம் குறைவாக இருக்கும், மார்ச் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில், அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி ஆகிறது.அமெரிக்காவில் சுமார், 30 வகை ஆப்பிள்கள் உள்ளன. ஆனால், சில வகைகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. விரைவில், மேலும் பல வகை ஆப்பிள்கள், இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
வாஷிங்டன் ஆப்பிள் கமிஷன் தலைவர் டோட் பிரைஹோவர் கூறியதாவது: செப்டம்பர் முதல் ஆகஸ்ட் வரையிலான 2019 – -20 சந்தை பருவத்தில், 30 லட்சம் பெட்டி ஆப்பிள்களை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, 25 லட்சம் பெட்டிகள் ஏற்றுமதி ஆகின.மெக்ஸிகோவுக்கு அடுத்து, மிகப் பெரிய இரண்டாவது சந்தை இந்தியாவாகும்.இந்தியாவில் அமெரிக்க ஆப்பிள்களுக்கு, 70 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. சென்னை, மும்பை, கோல்கட்டா துறைமுகங்கள் மூலமாக இறக்குமதி செய்யப்படுகிறது.சீனாவிலிருந்து, ஆப்பிள் இறக்குமதிக்கு அனுமதிக்கப்படுமானால், அது எங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|